திருவள்ளூர் மாவட்டம் உள்ளரம்பாக்கம் என்ற கிராமத்தில் சிறுவர்கள் சிலர் தேன்கூட்டில் கல் எரிந்ததால் தேனீக்கள் கொட்டியதில் (bees attack) 20க்கும் மேற்பட்ட சிறுவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் புள்ளரம்பாக்கம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வரும் நிலையில், இந்த கிராமத்தை சுற்றி ஏராளமான கருவேல மரங்கள் வளர்ந்து அடர்ந்து காணப்படுகிறது.
இந்நிலையில், அந்த பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் சிலர் அங்கு ஒரு மரத்திலிருந்த ராட்சத தேன் கூட்டில் கல் எரிந்துள்ளனர். இதனால், அந்த மரத்திலிருந்து ராட்சத தேனீக்கள் சுமார் (bees attack) மூன்றுக்கும் மேற்பட்ட தெருக்களில் உள்ள மக்களை துரத்தி துரத்திக் கொட்டியதால் பரபரப்பான சூழல் காணப்பட்டது.
மேலும், மூன்றுக்கும் மேற்பட்ட தெருக்களில் இருந்த சிறியவர்கள், பெரியவர்கள் என ராட்சத தேனீக்கள் அனைவரையும் தாக்கியதை அடுத்து அலறி அடித்துக் கொண்டு ஓடினர்.
இதனையடுத்து, மக்கள் பதறி அடித்து தீப்பந்தம் மற்றும் வேப்பிலைகளுடன் ஓடிய காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. மேலும், 20க்கும் மேற்பட்டவர்களை தேனீக்கள் கொட்டியதால் 108 அவசர ஆம்புலன்ஸ் உதவியோடு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும், இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்குள்ள ராட்சத தேன் கூட்டை கலைத்து தேனீக்களை விரட்டி வருகின்றனர்.