என்ன மட்டும் இந்த கொசு (Mosquitoes) விடாம துரத்தி துரத்தி கடிக்குது.. பக்கத்துலயே இருக்குற இவன கடிக்கமாட்டீங்குது.. ஒரு வேல “நான் ஈ” படத்துல மாறி இந்த கொசு நம்மள பழிவாங்குதோனு பலரும் புலம்புறதுன்டு.. ஆமாங்க..
கொசு (Mosquitoes) ஒருத்தர உண்மையிலேயே target பண்ணிதான் கடிக்குமாம். அது எப்படினு உங்க mind வாய்ஸ் எனக்கு நல்லாவே கேக்குது.. ஓகே இதுக்கு பின்னாடி இருக்குற அறிவியல் காரணங்கள் என்னனு பாக்கலாம்..
பொதுவா கொசுக்களுக்கு “ஓ” வகை blood group இருக்குறவங்கள தான் ரொம்ப பிடிக்குமாம். மத்த blood group இருக்குறவங்கள ஒருதடவை கடிக்கும் கொசு “ஓ” வகை blood group இருக்குறவங்கள 2 முறை கடிக்குமாம்.
அடுத்ததா, கொசுக்களுக்கு அதிகம் பிடிச்சது வியர்வைகள் தானாம். ஒருவருக்கு அதிகபடியா வியர்க்கும் போது, நம்ம உடம்புல, லாக்டிக் அமிலமும், அமோனியாவும் சுரக்குமாம். அதுதான் கொசுக்களுக்கு green signal னு சொல்றாங்க ஆராய்ச்சியாளர்கள். மேலும், அந்த நேரத்துல தான் கொசுக்கள் நம்மள அதிகமா தாக்கும்னு சொல்றாங்க..
உடல் வெப்பம் அதிகமா இருக்குறவங்கள கொசுக்கள் தேடி தேடி கடிக்குமாம். ஆமாங்க.. உடல் சூடு அதிகமா இருக்குறவங்களோட blood ரொம்ப அடர்த்தியா இருக்குமாம். நம்ம உடம்புல இருந்து எளிமையா ரத்தத்தை உரிய கொசுக்களுக்கு இது உதவியா இருக்குமாம்.
நாம அணியக் கூடிய உடைகள் கூட கொசுக்கள் நம்மள டார்கெட் பண்ணி கடிக்குறதுக்கு காரணம்னு சொல்றாங்க. ஏன்னா, கொசுக்களுக்கு அடர் நிறங்கள் தான் சீக்கிரமா தெரியுமாம். அப்டி நாம அடர் நிறத்துல உடை அணிந்திருந்தாலும் கொசுக்கள் நம்மள டார்கெட் பண்ணி கடிக்கும்னு சொல்றாங்க..
நாம என்ன மாதிரி உணவு சாப்பிட்டுருக்கோம்னு கூட கொசுக்களுக்கு தெரியுமாம். ஒருவேளை நாம சாப்பிட உணவு கொசுக்களுக்கு புடிச்சுருந்தா நம்மள தேடி வந்து கடிக்கும்னு சொன்னா நம்ப முடியுதா.. உண்மைதாங்க..
நாம எந்த மாதிரியான உணவு சாப்பிடுறோமோ அதுக்கு ஏத்தமாதிரிதான் நம்ம உடம்புல அமிலமும், வியர்வையும் வெளியேறுமாம். இத கொசுக்களும் கண்காணிக்குமாம். அதுனால தான் எளிமையா ஒருத்தர கொசுக்கள் டார்கெட் பண்ணி அட்டாக் பண்ணுதுனும் சொல்றாங்க..
அது மாதிரி தா ‘மது’ அருந்துறவங்கள, குறிப்பா ‘பீர்’ அருந்துறவங்கள கொசுக்கள் விடாம துறத்தும்னும் ஆய்வுகளில் சொல்றாங்க..
கொசுக்கள் நம்மள கடிக்குறதுக்கு முன்னாடி நம்ம கிட்ட வந்து முதல்ல நம்மள ஸ்கேன் பண்ணுமாம்.. அப்படி ஸ்கேன் பன்ணுணதுக்கு அப்புறமா நம்ம உடம்புல உட்கார்ந்து அதோட கால்கள்ல இருக்க கூடிய சுவை உணரிகளை பயன்படுத்தி எந்த இடத்துல கடிக்கலாம்னு கூட டிசைட் பண்ணி கடிக்கும்னும் ஆராய்ச்சியாளர்கள் சொல்றாங்க..