ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் வழக்கறிஞர் கிருஷ்ணகுமார் என்கிற மொட்டை கிருஷ்ணன் வழக்கறிஞர் பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த ஜூலை மாதம் 5 ஆம் தேதி பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் தான் புதிதாக கட்டி வந்த வீட்டின் முன் மர்மநபர்களால் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார் .
தமிழகத்தை உலுக்கிய இந்த கொடூர கொலை வழக்கில் 24க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான திருவேங்கடம் போலீசின் பிடியில் இருந்து தப்பித்தபோது என்கவுன்டர் மூலம் கொல்லப்பட்டார்.
தமிழ்நாட்டில் முக்கிய ரவுடிகள் ஸ்கெட்டுச் போட்டு நடத்திய இந்த படுகொலையில் ஏரளாமான வழக்கறிஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது .
இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் வழக்கறிஞர் கிருஷ்ணகுமார் என்கிற மொட்டை கிருஷ்ணன் வழக்கறிஞர் பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாடு போலீசார் அளித்த புகாரின் அடிப்படையில் பார் கவுன்சில் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.