பீகாரில் சொந்த மருமகளை மாமியாரே திருமணம் செய்துகொண்ட வினோத சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டம் பெல்வா கிராமத்தைச் சேர்ந்த மாமியார் – மருமகள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர் மூன்று வருட தங்கள் காதலைத் தொடர்ந்து தற்போது ஒரு உள்ளூர் கோயிலில் இந்து முறைப்படி மாலை மாற்றி தாலி கட்டி திருமணம் செய்து கொண்டனர் இவர்கள் திருமணம் செய்து கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகின்றது
மாமியார் சுமனுக்கு மருமகள் சோபா மீது காதல் ஏற்பட்டது இருவரும் வீட்டில் தனியாக இருந்தபோது பாலியல் ரீதியாக நெருக்கமாக இருந்தனர்.இது இவர்களின் கணவர்களுக்கு தெரியவந்தது. அவர்கள் இருவரையும் கண்டித்தனர். இதனால் மாமியார் மருமகள் இருவரும் ஓடிப்போய் திருமணம் செய்ய முடிவு செய்தனர். அதன்படி அவர்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறினர். இருவரும் அங்குள்ள ஒரு கோவிலில் இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.
திருமணம் செய்து கொண்ட இருவரும் உலகமே எதிர்த்தாலும் கவலையில்லை எனவும் மருமகளை ஆழமாக காதலிப்பதாகவும், அவள் வேறொருவரை திருமணம் செய்துகொள்வதும் , அவளை இழப்பதை தன்னால் நினைத்து கூட பார்க்க முடியாது ஒருவரையொருவர் பிரிந்து விடுவோமோ என்ற பயம்தான், திருமணம் செய்யவைத்தது. உலகம் என்ன நினைக்கும் என்பதைப் பற்றி கவலைப்படாமல், திருமணம் செய்து கொள்ள எங்களைத் தூண்டியது, என்று அவரது மாமியார் தெரிவித்துள்ளார்.
திருமண வீடியோவை பகிர்ந்து, அவர்களது குடும்பத்திர்க்கு திருமணத்தை அறிவித்தனர். இவர்கள் திருமணத்திற்கு, அப்பகுதி மக்கள் பெரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் . மேலும், இந்த திருமணத்தை ரத்து செய்யாவிட்டால் போராட்டத்தை நடத்துவோம் என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.