ஈரோட்டில், பெண் ஒருவர் மாமியார்-மருமகன் (son in law) இறந்து 7 நாட்கள் ஆகியும், உடல்களை புதைக்க பணமில்லாமல் அழுகிய நிலையில் சடங்களுடன் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு, குமணன் வீதி பகுதியில், 74 வயதாகும் மோகனசுந்தரம் என்பவரும், அவருடைய மனைவி சாந்தியும் (61) வசித்து வந்தனர். இவர்களுக்கு சசிரேகா என்ற மகளும், சரவணக்குமார் என்ற மகனும் உள்ளனர்.
இந்நிலையில், மகள் சசிரேகாவிற்கு திருமணம் ஆன நிலையில், சாந்தியின் தாயார் கனகம்பாளும் அவர்களுடன் ஒன்றாக வசித்து வந்துள்ளார்.
இதனையடுத்து, வயது மூப்பின் காரணமாக மோகனசுந்தரம், சாந்தி தம்பதி இருவருக்கும் உடல் நலம் குன்றியுள்ளது. இதனால், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளனர்.
மேலும், போதிய வருமானம் இல்லாமையால், கோவில் மற்றும் வெளி இடங்களுக்கு சென்று இலவசமாக கிடைக்கும் உணவுகளை வாங்கி சாப்பிட்டு வந்து உள்ளனர்.
இந்நிலையில், மோகனசுந்தரமும், சாந்தியின் தாயார் கனகாம்பாளும் இறந்துவிட்டனர். மேலும், பணம் இல்லாததால் இறந்த உடல்களுடன் சாந்தி தனது மகனுடன் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனால், வீட்டில் துர்நாற்றம் வீசியுள்ளது.
இதனையடுத்து, சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து, தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், ‘வறுமை, உடல் நலம் பாதிப்பு, சரியான நேரத்தில் உணவு கிடைக்காமை போன்ற காரணத்தால் கடந்த 7 நாட்களுக்கு முன்பு மோகனசுந்தரமும் (son in law), கடந்த 2 நாட்களுக்கு முன்பு கனகாம்பாளும் இறந்து விட்டதாகவும்,
இந்நிலையில், இறந்தவர்களின் உடல்களை புதைக்க தன்னிடம் பணம் இல்லாத நிலையில், அக்கம் பக்கத்து வீட்டில் உள்ள யாரிடமும் கூறி உதவி கேட்க மனம் இல்லை என்றும், இதனால் தான் 7 நாட்களாக நானும், எனது மகனும் இறந்த உடல்களுடன் இருந்துவிட்டோம்’ எனத் கூறியுள்ளார்.
இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.