வேலூர் அருகே கடன் தொல்லையால் தாய் , மகன் வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
வேலூர் மாவட்டம் ஏரிகுத்திமேடு பகுதியைச் சேர்ந்தவர் ஆட்டோ டிரைவரான அன்சர் இவருக்கு மும்தாஜ்
என்ற மனைவியும் நஸ்ரின், ஷபிஹா ஆகிய 2 மகள்களும், இம்ரான் என்ற மகனும் உள்ளனர்.
பிள்ளைகள் அனைவருக்கும் திருமணமாகிவிட்ட நிலையில் மகன் இம்ரான் அதேபகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார் இவருக்கு அர்ஷியமா என்ற மனைவியும், அபான் என்ற ஒரு வயது ஆண் குழந்தையும் உள்ளது .
இந்நிலையில் அன்சர் மற்றும் அவரது மனைவி மும்தாஜ் ஆகிய இருவரும் சுமார் 30 லட்சத்துக்கும் மேல் கடன் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த கடனை அடைப்பதற்காக உள்ளூர் பைனான்ஸ்களில் கடன் வாங்கி செலுத்தி வந்துள்ளனர்.
சக்திக்கு மீறி கடன் வாங்கியதால் பெரும் நெருக்கடியில் சிக்கிய இவர்கள் கடனை திருப்பி செலுத்த முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று மும்தாஜ், இம்ரான் இருவரும் வீட்டில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருவரின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் . இதையடுத்து இச்சம்பவம் குறித்து வழக்கு பதிந்து போலீசார் விசாரணை நடத்தினர்.
Also Read : 3 நாள் சுற்றுப்பயணமாக ரஷ்யா புறப்பட்டார் பிரதமர் மோடி..!!
இதில் கடன் கொடுத்தவர்கள் கடனை திருப்பி செலுத்துமாறு கூறி கதவை தட்டியதால் அவமானமடைந்து மன உளைச்சலுக்கு ஆளான மும்தாஜ், அவரது மகன் இம்ரான் ஆகியோர் சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
இந்நிலையில் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு இம்ரான் தனது தாயார் மும்தாஜுடன் கதறி அழுதவாறு வீடியோ பதிவிட்டு தன்னுடைய உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் வாட்ஸ் அப்பில் அனுப்பியுள்ளார்.
அந்த வீடியோவில் எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை. அப்பா அன்சர் எல்லா இடங்களிலும் எங்களை காட்டி கடன் வாங்கியுள்ளார். தற்போது கடனை கட்டவும் முடியவில்லை. பதிலும் சொல்ல முடியவில்லை என கதறி அழுதுள்ளார்.
வேலூர் அருகே சக்திக்கு மீறி கடன் வாங்கி திருப்பி செலுத்தமுடியாமல் தாய் , மகன் வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.