தமிழ் திரை உலகில் ஆர்.ஜே பாலாஜியின் சிங்கப்பூர் சலூன் உள்ளிட்ட 4 திரைப்படங்கள் இன்று ஒரே நாளில் (Movie release) வெளியாகின.
அதன்படி இன்று திரை அரங்கில் வெளியாகி உள்ள சிங்கப்பூர் சலூன், ப்ளூ ஸ்டார், முடக்கறுத்தான், தூக்குதுரை ஆகிய திரைப்படங்கள் குறித்து பார்க்கலாம்.
சிங்கப்பூர் சலூன்.
இயக்குநர் கோகுல் இயக்கத்தில் ஆர்ஜே பாலாஜி நடிப்பில் வெளியான திரைப்படம் சிங்கப்பூர் சலூன்.
இந்த படத்தில் சத்யராஜ், லால், மீனாட்சி சவுத்ரி, தலைவாசல் விஜய் உள்ளிட்டவர்கள் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர்.
முடி திருத்துபவராகும் தன்னுடைய கனவை நனவாக்க முயற்சிக்கும் ஆர்ஜே பாலாஜி மற்றும் அவர் சந்திக்கும் போராட்டங்களை கதைக்களமாக வைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.
காமெடி என்டர்டெயினராக வெளியாகியுள்ள இந்தப் படம் சர்வதேச அளவில் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.
ப்ளூ ஸ்டார்
அசோக் செல்வன் மற்றும் சாந்தனு நடிப்பில் இன்று வெளியான திரைப்படம் ப்ளூ ஸ்டார். இயக்குனர் எஸ்.ஜெயகுமார் இயக்கிய இந்த திரைப்படத்தை, லெமன் லீப் கிரியேஷன் பிரைவேட் லிமிடெட் மற்றும் நீலம் புரொடக்சன்ஸ் இணைந்து தயாரித்துள்ளது.
இதில் கீர்த்தி பாண்டியன், பிரித்விராஜன், பகவதி பெருமாள் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.
முடக்கறுத்தான்
சித்த மருத்துவர் கே.வீரபாபு, எழுதி, இயக்கி, தயாரித்து, பின்னணி இசை கோர்த்து, நடித்துள்ள படம் ‘முடக்கறுத்தான்’.
இதையும் படிங்க : Republic day – சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு!
இந்தப்படம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்கும் குற்றத்தைக் கருவாக வைத்து தயாராகியுள்ளது. இத்திரைப்படத்தில் வீரபாபு,மஹானா, சமுத்திரக்கனி, சூப்பர் சுப்பராயன் போன்ற முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் இன்று திரை அரங்குகளில் வெளியாகி (Movie release) உள்ளது
தூக்குதுரை
இயக்குனர் டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் யோகி பாபு, இனியா, ராஜேந்திரன், பாலா சரவணன் என பலர் நடித்திருக்கும் திரைப்படம் தூக்குதுரை.
https://x.com/ITamilTVNews/status/1750384908185612528?s=20
இப்படத்தினை தயாரிப்பாளர் அரவிந்த் வெள்ளைப்பாண்டியன் தயாரிக்க, இசையமைப்பாளர் மனோஜ் கே எஸ் இசையமைத்துள்ளார்.
நகைச்சுவை மற்றும் திகில் படமான இப்படத்தில் பால சரவணன், மகேஷ், சென்ராயன் மற்றும் அஸ்வின் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் இன்று திரை அரங்குகளில் வெளியாகி உள்ளது