காங்கேயம் அருகே மகளுக்கு காதல் திருமணம் செய்து வைத்த நபரைக் கொலை செய்த தந்தைக்கு நீதிமன்றம் 14 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் தாலுக்கா தம்மரொட்டிபாளையத்தைசே சேர்ந்த நடராஜ் (55) கடந்த 2017 ஆம் ஆண்டு தனது மகளுக்கு காதல் திருமணம் செய்து வைத்த அதே ஊரைச் சேர்ந்த குமாரசாமி (53) என்பவரை, கடப்பாரையால் தாக்கி கொடூரமாக கொலை செய்தார் .
Also Read : “நெல்லையில் போலீசார் ஏன் கொலையை தடுக்கவில்லை? – நீதிபதிகள் சரமாரி கேள்வி..!!
இதையடுத்து நடராஜ் மீது கொலைவழக்கு பதிவு செய்து அவரை கைது செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர் . இதையடுத்து இந்த வழக்கு பல நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த வழக்கில் தீர்ப்பு வளக்கப்பட்டுள்ளது.
அதன்படி தனது மகளுக்கு காதல் திருமணம் செய்து வைத்த நபரைக் கொலை செய்த தந்தை நடராஜ்க்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தாராபுரம் நீதிமன்றம் தீர்ப்புவழங்கியுள்ளது.