உத்தரபிரதேசத்தில், அசைவ உணவகத்தில் இந்துக்கடவுள்களின் படங்கள் உள்ள பேப்பரை கொண்டு தலீப் என்பவர் அசைவ உணவுகளை பார்சல் கட்டியதாக அம்மாநில போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
உத்தரபிரதேசத்தில், அசைவ உணவகத்தில் இந்துக்கடவுள்களின் படங்கள் உள்ள பேப்பரை கொண்டு தலீப் என்பவர் அசைவ உணவுகளை பார்சல் கட்டியதாக அம்மாநில போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.#UttarPradesh #HinduInsultNotArt pic.twitter.com/AdOVOBRunC
— i Tamil News | i தமிழ் நியூஸ் (@ITamilTVNews) July 5, 2022
உத்தரபிரதேச மாநிலம் சம்பல் நகரில் அசைவ உணவகம் ஒன்று உள்ளது. இந்த கடையின் உரிமையாளர் தலீப் என்ற இஸ்லாமியர் இந்து கடவுள்களின் புகைப்படங்கள் இருக்கும் பேப்பரில் உணவுகளை பார்சல் கட்டி கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
பொதுவாக நாளிதழில் உணவகங்களில் பார்சல் கட்டி கொடுக்கும் வழக்கமாக இருந்துவருகிறது. நாளிதழில் கடவுள்களின் புகைப்படங்கள் இடம்பெறுவது வாடிக்கையான ஒன்று. பெரும்பாலான பேப்பர்கள் பயன்படுத்தப்பட்டு குப்பைத் தொட்டிகளிலும் தெருவோரங்களிலும் வீசப்பட்டு வருவதையும் காணமுடியும். அப்படி இருக்க கடவுள் படங்கள் இருந்த பேப்பரில் பொட்டலம் கட்டி கொடுப்பதில் என்ன தவறு இருக்கிறது? இஸ்லாமியர் என்பதற்காக கைது செய்வதா என சமூக வலைதளங்களில் கேள்விகள் எழுப்பி வருகின்றனர்.