அசாம் மாநிலம் சாச்சர் மாவட்டம், கங்கர் பகுதியில் ஒரு ஆடு மனித குழந்தையை போல குட்டியை ஈன்றுள்ள சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
விலங்குகள் வினோதமான உருவத்தில் தன குட்டிகளை ஈன்றதை நாம் பார்த்திருப்போம். அதாவது இரண்டு தலைகலுடன், மூன்று கால்களுடன், மனித முக சாயலுடன் கன்றுக்குட்டி, என பல வினோதமான உருவங்களை நாம் பார்த்திருப்போம்.
அந்த வகையில் அசாம் மாநிலத்தில் உள்ள சாச்சர் மாவட்டத்தின் கங்கர் பகுதியில் ஒரு ஆடு மனித குழந்தையை போல குட்டியை ஈன்றுள்ளது.
விநோதமாக பிறந்துள்ள அந்த ஆட்டின் குட்டி குறித்து அந்த ஆடு வளர்ப்பவர் கூறும் போது, ஆடு சினையாக இருந்த போது வழக்கமாக ஆடுகள் குட்டி போடுவது போல தான் குட்டி போடும் என கருதியதாகவும் ஆனால் கடந்த திங்கட்கிழமை ஆடு குட்டி போடும் போது அது முழுதாக வளராத மனித குழந்தை போல இருந்ததாகவும் தெரிவித்தார்.

மேலும் வழக்கமாக ஆட்டிற்கு இருக்கும் வால் இல்லை என்றும் உடல் முழுவதும் மனித குழந்தையின் உடல் போல இருந்ததா கூறிய அந்த ஆட்டின் உரிமையாளர், அதன் காது மற்றும் கால்கள் மட்டும் வித்தியாசமாக இருந்ததாகவும் கூறினார்.
மேலும் இந்த ஆட்டு குழந்தை பிறந்து சில நிமிடங்களிலேயே மரணித்துவிட்டதால் அதை குழி தோண்டி புதைத்துவிட்டதாக அந்த ஆட்டின் உரிமையாளர் கூறினார்.
மனித உருவில் ஒரு ஆடு குட்டியை ஈன்றுள்ள புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.