நாளை (30.09.23) தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள தலைநகரங்களில் நாம் தமிழர் கட்சி சார்பாக 40 இடங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
காவிரி நதிநீர் பங்கீட்டில் தமிழகத்திற்கான நீரினைத் திறந்துவிட மறுக்கும் கர்நாடாக மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் அரசைக் கண்டித்தும், தமிழகத்திற்கான உரிமைகளைப் பெற்றுத் தராமல் காலம் தாழ்த்தி வரும் இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசின் தமிழர் விரோதப் போக்கை கண்டித்தும்,
தமிழ்நாட்டின் காவிரி நதிநீர் உரிமையை நிலைநாட்ட திறனற்ற தமிழ்நாட்டை ஆளும் திமுக அரசைக் கண்டித்தும் நாளை காலை 10 மணியளவில் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் நாம் தமிழர் கட்சி சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் நடைபெறு இந்த போராட்டத்தில், நாம் தமிழர் கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதி உள்ளிட்ட அனைத்து நிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்து நிலைப் பொறுப்பாளர்களும் கலந்துகொள்ள உள்ளனர்.
நாம் தமிழர் கட்சியின் மத்திய மண்டல செயலாளர் வக்கீல் ஸ்ரீதர் தலைமையில் சென்னை கலெக்டர் அலுவலகம் அருகில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.