நடிகை சமந்தாவின் முன்னாள் கணவரான நாக சைதன்யாவிற்கு விரைவில் 2ஆம் திருமணம் நடைபெற உள்ளதாகவும், இன்று திருமண நிச்சயதார்த்தம் நடக்க உள்ளதாகவும் பரபரப்பு தகவல் பரவி வருகிறது.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நாகார்ஜுனாவின் மூத்த மகன் நாக சைதன்யா. இரண்டாவது அகில். இவர்கள் இருவரும் தற்போது டோலிவுட்டில் இளம் நாயகர்களாக வலம் வருகிறார்கள்.
கடந்த 2017-ம் ஆண்டு நாகார்ஜுனாவின் மூத்த மகன் நாக சைதன்யா நடிகை சமந்தாவை காதலித்து கரம்பிடித்தார். ஆனால் இவர்களின் திருமண வாழ்க்கை 4 ஆண்டுகளில் முடிவுக்கு வந்தது.
கடந்த 2021-ம் ஆண்டு சமந்தாவுக்கும், நாக சைதன்யாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
இந்நிலையில் விவாகரத்துக்கு பின்னர் நடிகை சோபிதா துலிபாலா மீது நடிகர் நாக சைதன்யா காதல் விழுந்தார். இதனிடையே இவர்கள் இருவரும் வெளிநாட்டில் ஒன்றாக டேட்டிங் செய்தபோது எடுத்த புகைப்படங்கள் லீக் ஆகி காட்டுத்தீ போல் பரவியது.
ஆனால் இதுகுறித்து இருவரும் தரப்பிலும் வாய் திறந்ததே இல்லை. இப்படி கடந்த சில ஆண்டுகளாக ரகசியமாக காதலித்து வந்த இந்த ஜோடி, தற்போது திருமண பந்தத்தில் இணைய முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்த வகையில் நடிகை சோபிதா துலிபாலா, நாக சைதன்யா ஜோடியின் திருமண நிச்சயதார்த்தம் இன்று நடைபெற உள்ளதாக தெலுங்கு ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன.
இந்த நிச்சயதார்த்தம் நாக சைதன்யாவின் இல்லத்தில் வைத்து தான் நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிகழ்வில் மணமக்கள் இருவீட்டார் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்துகொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த சூழலில் நடிகர் நாக சைதன்யாவின் இரண்டாவது திருமணம் தான் தற்போது டோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.