நாகை – இலங்கை காங்கேசன்துறை இடையே தொடங்கப்பட்ட பயணிகள் கப்பல் சேவை நாளை மறுதினத்துடன் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு 40 ஆண்டுகளுக்குப் பிறகு பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை அக்டோபர் 14 தேதி தொடங்கபட்டது.நாகை -இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு பயணிகள் கப்பல் போக்குவரத்துக்கு மத்திய அரசு ரூ.3 கோடி நிதி அறிவித்தது.
இதனை தொடர்ந்து தமிழக அரசு நாகை துறை முகத்தை ஆழப்படுத்தி, நவீனப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டது. பிறகு கடந்த மாதம் 20 ஆம் தேதி குடியுரிமை பெறுவது, மருத்துவ பரிசோதனை செய்வது, பயணிகள் கொண்டு வரும் உடமைகளை பாதுகாப்பாக வைப்பது தொடர்பாக பொதுப்பணித்துறை அமைச்சர் எவ.வேலு துறைமுகத்தில் ஆய்வு செய்தனர்.
அதன் பிறகு அக்டோபர் 14 தேதி பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக பயணிகள் கப்பல் போக்குவரத்தைத் தொடங்கி வைத்த அவர், இந்த புதிய கப்பல் சேவை, இரு நாடுகளின் நகரங்களிடையே இணைப்பை ஏற்படுத்துவதுடன், வர்த்தகம், சுற்றுலா, இரு நாட்டு மக்களுக்கிடையிலான உறவுகளையும் மேம்படுத்தும். இருதரப்பு இளைஞர்களுக்கும் புதிய வாய்ப்புகளையும் உருவாக்கும் என்று பிரதமர் தெரிவித்து இருந்தார்.
மேலும் நாகை -இலங்கை காங்கேசன்துறை துறைமுகத்திற்கு 3 மணி நேரம் 30 நிமிடத்தில் எளிமையாக செல்ல முடியும்.இந்த பயணிகளுக்கான கட்டணம் 6,500 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நாகை – இலங்கை காங்கேசன்துறை இடையே தொடங்கப்பட்ட பயணிகள் கப்பல் சேவை நாளை மறுதினத்துடன் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதனை தொடர்ந்து இலங்கை சென்றுள்ள சுற்றுலா பயணிகளில் பெரும்பாலோனோர் சொந்த ஊர் திரும்ப காங்கேசன்துறை துறைமுகத்திற்கு வருகை தந்துள்ளனர்.