நாகாலந்து நாய் விவகாரம் தொடர்பாக பேசிய ஆர்.எஸ் .பாரதிக்கு நாகாலாந்து சுற்றுலாத்துறை அமைச்சர் கண்டனம் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை அம்பத்தூரில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அமைச்சர் சேகர்பாபு தலைமையில் திமுக கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக திமுக அமைப்பு செயலாளர் ஆர். எஸ். பாரதி கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர் திமுக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆர். எஸ். பாரதி, ஆட்சிக்கு தொல்லை கொடுக்க வேண்டும் என்ற நோக்கிலேயே ஆளுநர் ரவி செயல்பட்டு வருகிறார். எத்தனயோ ஆளுநர்களை பார்த்து இருக்கிறோம். ஆனால், இந்த ஆளுநர் என்ன செய்கிறார் என்றால், வேண்டுமென்றே அரசை வம்பு சண்டைக்கு இழுக்கிறார்.
சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க மறுக்கிறார். நாகாலாந்தில் இவருக்கு ஏற்பட்ட நிலை என்ன தெரியுமா? ஊரை விட்டே விரட்டி அடித்தார்கள். தவறாக நினைக்க வேண்டாம். நான் ஒரு உதாரணத்திற்காக சொல்கிறேன்.
நாகாலந்தில் நாய் இறைச்சியை திண்பார்கள். அவர்களுக்கே அந்த அளவிற்கு சொரணை இருந்து, இந்த ஆளுநரை ஓட ஓட விரட்டினார்கள் என்றால், உப்பு போட்டு உணவு உண்ணும் தமிழனுக்கு எந்த அளவிற்கு சொரணை இருக்கும் என்பதை ஆளுநர் உணர வேண்டும்” என ஆளுநர் ரவிக்கு எதிராக கண்டித்து பேசியிருந்தார்.
நாகாலந்து நாய் விவகாரம் தொடர்பாக பேசிய ஆர்.எஸ் .பாரதிக்கு நாகாலாந்து சுற்றுலாத்துறை அமைச்சர் டெம்ஜென் இம்னா அலோங் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் …
உங்கள் பெயரில் பாரதம் இருந்தபோதிலும், ஒட்டுமொத்த பாரதமே பெருமைப்படும் ஒரு சமூகத்தை அவமதிக்கவும், புண்படுத்தவது வருத்தம் அளிக்கிறது இந்தியா கூட்டணியில் இருப்பவர்கள் உங்கள் நிர்வாகிகளை கட்டுப்படுத்துங்கள்.. எங்களது கலாச்சாரத்தையும் நன்றாக அறிந்து கொள்ள வடகிழக்கு பக்கம் வாருங்கள் என்று பதிவிட்டு இருந்தார்.
இந்த நிலையில்,மன்னிக்கவும் உங்களால் இந்தி படிக்க முடியாது, இதோ உங்களுக்காக மொழிபெயர்த்து பதிவிடுகிறேன் என்று ஆங்கிலத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும் எமது வடக்கு-கிழக்கு மக்கள் ஒன்றிணைந்து எமது வாழ்வாதாரம் குறித்து அவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று எச்சரிக்கை விடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.