நாகாக்கள் துணிச்சல், நேர்மை, கண்ணியம் மிக்கவர்கள் அவர்களை இழிவுபடுத்துவது கேவலமானது என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
கலைஞர் நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய ஆர்.எஸ்.பாரதி நாகாலாந்து மக்கள் நாய்கறி உண்பார்கள் என தரக்குறைவாக பேசிய சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியும் அவரது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
இதுகுறித்து ஆர்.என்.ரவி தனது ட்விட்டர் பக்கத்தில் விடுத்துள்ள கண்டன பதிவில் கூறிருப்பதாவது :
‘நாகாக்கள் துணிச்சல், நேர்மை, கண்ணியம் மிக்கவர்கள். அவர்களை திமுகவின் திரு. ஆர்.எஸ்.பாரதி ‘நாய் கறி உண்பவர்கள்’ என பகிரங்கமாக இழிவுபடுத்துவது கேவலமானது, ஏற்க முடியாதது.
மொத்த இந்தியாவே பெருமைப்படும் சமூகத்தை காயப்படுத்தக் கூடாது என திரு. பாரதியை வலியுறுத்துகிறேன் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.