நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலையை 5 ரூபாய் 20 காசுகளில் இருந்து 5 ரூபாய் 35 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது.
தமிழகத்தில் முட்டை உற்பத்திகளில் நாமக்கல் மாவட்டம் முண்ணனியில் உள்ளது. இங்கு சுமார் 1000-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் இயங்கி வரும் நிலையில் தினமும் 5 கோடிக்கு மேல் முட்டைகள் உற்பத்தியாகின்றன. இந்த நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் நாமக்கல் மண்டல தலைவா் மருத்துவா் பி.செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், முட்டை விலை நிர்ணயம் குறித்து பண்ணையாளார்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. இதில் மற்ற மண்டலங்களில் விலையில் தொடா்ந்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாலும், முட்டை உற்பத்தி குறைந்துள்ளதாலும் விலையில் மாற்றம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடா்ந்து முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலையானது மேலும் 15 காசுகள் உயா்த்தப்பட்டு ரூ. 5.35-ஆக நிா்ணயிக்கப்பட்டது. முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை கடந்த 22-ம் தேதி 10 காசுகள் விலை உயர்த்தி, 5 ரூபாய் 20 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இன்று மீண்டும் ஒரே நாளில் 15 காசுகள் உயர்த்தப்பட்டு 5 ரூபாய் 35 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது.
இந்த விலை உயர்வு குறித்து கூறிய பண்ணையாளர்கள் தமிழகம், கேரளா மற்றும் வட மாநிலங்களில் முட்டை விற்பனை தொடர்ந்து அதிகரித்த நிலையில் தேவை ஏற்பட்டதோடு, கோடையை ஒட்டி அதிகளவு வயதான கோழிகள் விற்பனை செய்யப்பட்டதால் முட்டை உற்பத்தி கணிசமாக குறைந்தது.
தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் சத்துணவு திட்டத்திற்கு தினசரி சராசரியாக 40 லட்சம் முட்டைகள் அனுப்பி வைக்கப் படுவதால் விற்பனைக்கு முட்டைகள் இல்லாததால் விலையை உயர்த்தி உள்ளதாக தெரிவித்தனர். இவ்விலை தொடர்ந்து சற்று உயர வாய்ப்புள்ளதாகவும் கோழிப் பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.