தேர்தலில் வெற்றி பெற 505 பொய் வாக்குறுதிகள் கொடுத்த திமுக, அவற்றில் 5 வாக்குறுதிகளைக் கூட முழுமையாக நிறைவேற்றவில்லை என அண்ணாமலை கடுமையாயக குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழகம் முழுவதும் என் மண் என் மக்கள் என்ற தலைப்பில் அண்ணாமலை பாத யாத்திரை மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக நாங்குநேரியில் நடைபயணத்தில் ஈடுபட்டார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்,
வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான நாங்குநேரியில் மக்களின் பொருளாதார நிலை உயர வேண்டும் என்பதற்காக, நாங்குநேரி ஜீயர் அவர்கள், சிறப்பு பொருளாதார மண்டலம் (SEZ) அமைக்க 2,000 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கினார். இருபது ஆண்டுகளுக்கு முன்பு நிலம் கிடைத்தும், இன்னும் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இந்த ஊழல் திமுக அரசுவைத்திருக்கிறது.
பட்டியல் சமூக மக்களை வஞ்சிப்பது திமுகவுக்குப் புதிதல்ல. திமுகவில் அமைச்சராக இருந்த சத்தியவாணி முத்து அவர்கள், ஒடுக்கப்பட்ட மக்களை கருணாநிதி வஞ்சிக்கிறார் என்று கூறி, திமுகவில் இருந்தே வெளியேறினார்.
மத்திய அரசு பட்டியல் சமூக மக்களுக்காக வழங்கும் SCSP நிதியில், 10,466 கோடி செலவிடாமல் வீணடித்தது திமுக. இந்த ஆண்டு அந்த நிதியொல் 1,600 கோடியை, மற்ற திட்டங்களுக்கு மடைமாற்றியுள்ளது. திமுகவின் சமூக நீதி, சமத்துவம் எல்லாம் மக்களைப் பிரித்தாளும் சூழ்ச்சிக்காகத்தான்.
தென்மாவட்டங்களில் ஜாதிக் கலவரங்களுக்கு திமுகதான் காரணம். இன்றைய சபாநாயகர் அப்பாவுவே, ஜாதியை வளர்த்து, ஜாதிக் கலவரங்களை திட்டமிட்டு உருவாக்கியதே கருணாநிதிதான் என்று கூறியிருக்கிறார். தமிழகத்தில் நடக்கும் ஜாதிப் பிரச்சினைகளுக்கு திமுக தான் காரணம்.
தேர்தலில் வெற்றி பெற 505 பொய் வாக்குறுதிகள் கொடுத்த திமுக, அவற்றில் 5 வாக்குறுதிகளைக் கூட முழுமையாக நிறைவேற்றவில்லை. எப்படி ஊழல் செய்வது என்பதில்தான் திமுகவின் முழுக் கவனமும் இருக்கிறது.
வரும் பாராளுமன்றத் தேர்தலில், ஊழலின் மொத்த வடிவமான, மக்களை ஜாதியின் பெயரால் பிரித்து அரசியல் செய்யும் திமுக கூட்டணியை முழுமையாகப் புறக்கணிப்போம். பிரதமர் அவர்கள் நல்லாட்சியைத் தொடரச் செய்வோம் என்று தெரிவித்துள்ளார்.