CAA Act- சட்டத்தை அமல்படுத்துவதற்கோ, நடைமுறைப்படுத்துவதற்கோ மாநில அரசுக்கு எந்த பணியும் இல்லை என முதலமைச்சருக்கு நாராயணன் திருப்பதி பதிலடி கொடுத்துள்ளார்.
பாஜக தலைமையிலான மத்திய அரசால் கடந்த 2019ஆம் ஆண்டு குடியுரிமை திருத்த சட்டம் (CAA) கொண்டுவரப்பட்டது. இந்த சட்டத்திற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்புகள் கிளம்பியது.
இந்நிலையில், மத்திய துறைமுகம், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழித் துறை இணை அமைச்சர் சாந்தனு தாக்கூர் கொல்கத்தாவில் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர், “சிஏஏ சட்டம் இன்னும் ஏழு நாட்களுக்குள் நாடு முழுவதும் செயல்படுத்தப்படும். இது நான் அளிக்கும் உத்தரவாதம்” என்றார்.
இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
தமிழ்நாட்டில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதைத் தி.மு.க அரசு ஒருபோதும் அனுமதிக்காது.
உறுதியாக சொல்கிறேன். தமிழ்நாட்டில் CAA கால் வைக்க விட மாட்டோம் என்று பதிவிட்டு இருந்தார்.
மேலும் CAA சட்டத்தை அமல்படுத்துவதற்கோ, நடைமுறைப்படுத்துவதற்கோ மாநில அரசுக்கு எந்த பணியும் இல்லை என முதலமைச்சருக்கு நாராயணன் திருப்பதி பதிலடி கொடுத்துள்ளார்.
இதுதொடர்பாக தொடர்பாக பாஜக துணை தலைவர் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்:
இது போன்று சொல்வதே சட்ட விரோதம். தமிழகத்தில் யாரும் இந்த சட்டதிருத்தத்தின் கீழ் குடியுரிமை கேட்டு விண்ணப்பித்திருக்க மாட்டார்கள் என்று கருதுகிறேன்.
அப்படியே யாராவது விண்ணப்பித்தாலும் மத்திய அரசாங்கத்தை தான் அணுக வேண்டுமேயன்றி மாநில அரசுக்கு இதில் எந்த பணியும், தொடர்பும் இல்லை.
அதாவது பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்காளதேச நாடுகளில் மத ரீதியாக துன்புறுத்தப்பட்ட ஹிந்துக்கள், சீக்கியர்கள்,பௌத்தர்கள், ஜைனர்கள், பார்சிக்கள் அல்லது
கிறிஸ்துவர்கள் டிசம்பர் 2014க்கு முன்பு இந்தியாவிற்கு வந்திருந்து, இந்திய குடியுரிமைக்கு விண்ணப்பித்திருந்தால் அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும் என்பதே சட்டத் திருத்தம்.
இதையும் படிங்க:https://x.com/ITamilTVNews/status/1752956956330111265?s=20
ஆகவே, இந்த சட்டத்தை அமல்படுத்துவதற்கோ, நடைமுறைப்படுத்துவதற்கோ மாநில அரசுக்கு எந்த பங்கும் நிலையில்,
இதை அறிக்கை வெறும் அரசியல் பேச்சு மட்டுமே என்பதை முதல்வர் உணர்ந்திருக்கிறாரா என்பதே கேள்விக்குறியாகிறது.
இந்த சட்டமானது இந்திய குடிமக்களுக்கானதே இல்லை என்பதை முதல்வர் அறிவாரா? இதை விமர்சிக்கலாம் அல்லது எதிர்க்கலாம்,
ஆனால் நடைமுறைப்படுத்த மாட்டோம் என்றோ (CAA Act )கால் அல்லது கை பதிக்க விட மாட்டோம் என்று சொல்வது வெறும் வெற்று பேச்சே.
குடியுரிமை வழங்குவது என்பது முழுக்க முழுக்க மத்திய அரசின் உரிமை என குறிப்பிட்டுள்ளார்.