2002-ல் நடைபெற்ற குஜராத் கலவரம் தொடர்பான பொய்யான குற்றச்சாட்டுகளை 19 வருடங்களாக பிரதமர் மோடி அமைதியாக சகித்துக்கொண்டதாக, உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
2001-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று, நரேந்திர மோடி முதல்முறையாக குஜராத் மாநிலத்தின் 14 வது முதலமைச்சராக பதவியேற்றார். குஜராத் முதலமைச்சராக நரேந்திர மோடி பொறுப்பேற்ற ஐந்தே மாதங்களில், அதாவது 2002 ஆம் பிப்ரவரி 27 ஆம் தேதி உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்து குஜராத்துக்கு வந்த சபர்மதி ரயில் கோத்ரா பகுதியில் தீப்பிடித்து எரிந்தது.
இந்த சம்பவத்தில் 59 இந்து யாத்திரிகர்கள் கொல்லப்பட்டனர். 2005 ஆம் ஆண்டு இது தொடர்பாக மத்திய அரசு அமைத்த விசாரணை ஆணையம், ரயில் பெட்டியில் சமையல் செய்தபோது ஏற்பட்ட தீ விபத்து காரணமாகவே பலர் உயிரிழந்ததாகவும், தாக்குதல் நடத்தப்படவில்லை என்றும் தெரிவித்தது.
இஸ்லாமியர்கள் மீது பழிபோட்ட இந்துத்துவ அமைப்பினர்:
இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் இதற்கு இஸ்லாமியர்களே காரணம் எனக்கூறி இந்துத்துவ அமைப்பினர் குஜராத் முழுவதும் ரயில் எரிந்த அதே நாளில் தாக்குதல்களை தொடங்கினர்.
காவல்துறையின் கட்டுப்பாடும் இன்றி கோரத் தாக்குதல்கள் தொடர்ந்தன. 2 வாரங்கள் கட்டுக்கடங்காமல் நடந்த வன்முறையில் 20,000 இஸ்லாமியர்களின் வீடுகள் மற்றும் கடைகள், 360 மசூதிகள் அழிக்கப்பட்டன. 1.5 லட்சம் மக்கள் வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்தனர்.
அரசு தகவலின்படி 790 இஸ்லாமியர்களும் 254 இந்துக்களும் கொல்லப்பட்டனர். கலவரம் தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட மனித உரிமை அமைப்புகள் இதில் 2,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
பிப்ரவரி 28 ஆம் தேதி அகமதாபாத்தின் நரோதா பாட்டியா பகுதியில் 97 இஸ்லாமியர்கள் இந்துத்துவ அமைப்பினரால் கொல்லப்பட்டனர். வீட்டில் இருந்த பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர். சிறுவர்கள், ஆண்கள் படுகொலை செய்யப்பட்டது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில், பாஜக அமைச்சராக இருந்த மாயா கோட்னானி 2009 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். பஜ்ரங்தள் தலைவர் பாபு பஜ்ரங்கிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
இஹ்சான் ஜாஃப்ரி கொடூர கொலை:
அதே நாளான பிப்ரவரி 28 ல் அஹமதாபாத்தின் சமன்புராவில் உள்ள இஸ்லாமியர் குடியிருப்பான குல்பெர்க் சொசைட்டியில் கலவர கும்பல் தாக்குதல் நடத்தி வீடுகளுக்கு தீ வைத்தது. இதில் காங்கிரஸ் எம்.பியாக இருந்த இஹ்சான் ஜாஃப்ரி உட்பட 35 க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் உயிருடன் தீ வைத்து எரிக்கப்பட்டனர். இந்த கொடூர நிகழ்வில் மட்டும் 69 பேர் கொல்லப்பட்டனர். இதில் பாஜகவை சேர்ந்த பிபிப் படேல் உட்பட 12 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் ஒருவருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது.
அதே நாளான பிப்ரவரி 28 ல் அஹமதாபாத்தின் சமன்புராவில் உள்ள இஸ்லாமியர் குடியிருப்பான குல்பெர்க் சொசைட்டியில் கலவர கும்பல் தாக்குதல் நடத்தி வீடுகளுக்கு தீ வைத்தது. இதில் காங்கிரஸ் எம்.பியாக இருந்த இஹ்சான் ஜாஃப்ரி உட்பட 35 க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் உயிருடன் தீ வைத்து எரிக்கப்பட்டனர். இந்த கொடூர நிகழ்வில் மட்டும் 69 பேர் கொல்லப்பட்டனர். இதில் பாஜகவை சேர்ந்த பிபிப் படேல் உட்பட 12 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் ஒருவருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது.
”பிரதமர் மோடி குற்றவாளி அல்ல”:
இந்த கலவரம் தொடர்பாக அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணைக் குழு கடந்த 2012 ஆம் ஆண்டு டிசம்பர் 8 ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்தது. அதில், நரேந்திர மோடி, போலீஸ் உயரதிகாரிகள் உட்பட 59 பேர் எந்த குற்றமும் செய்யவில்லை என்று தீர்ப்பளிக்கப்பட்டது. இதனை மறு ஆய்வு செய்யக்கோரி கொல்லப்பட்ட காங்கிரஸ் எம்.பி. ஜாஃப்ரியின் மனைவி ஜக்கியா ஜாஃப்ரி தொடர்ந்த வழக்கு அஹமதாபாத் மாஜிஸ்திரேட் மற்றும் குஜராத் உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. உச்சநீதிமன்றத்தில் வழக்கு இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஜக்கியா ஜாஃப்ரி மற்றும் சமூக ஆர்வலர் தீஸ்தா சீதல்வத் ஆகியோர் மேல்முறையீடு மனுவை தாக்கல் செய்தனர். அந்த வழக்கின் விசாரணை நிறைவடைந்ததை அடுத்து இன்றைக்கு தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி இன்று நரேந்திர மோடிக்கு எதிரான ஜக்கியா ஜாஃப்ரியின் மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கிறது.
இன்ந்த நிலையில், காங்கிரஸ் எம்.பி இஹ்சான் ஜாஃப்ரி கொல்லப்பட்டதற்கு அவரது மனைவி ஜாக்கியா ஜாஃப்ரி, அப்போதைய குஜராத் முதல்வராக இருந்த பிரதமர் மோடிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட மேல்முறையீட்டு மனுவை நேற்று தள்ளுபடி செய்த நிலையில், அமித்ஷா தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்துள்ளார்.
இதுகுறித்து தனியார் செய்தி நிறுவனமான ANI செய்தி நிறுனத்திற்கு அளித்த பேட்டியில்;
2002 குஜராத் கலவரத்துடன் தொடர்புடைய பொய்யான குற்றச்சாட்டுகளை பிரதமர் நரேந்திர மோடி 19 ஆண்டுகளாக அமைதியாகச் சகித்துக் கொண்டார், ஏனெனில் சட்டப்பூர்வ நடைமுறைகள் நடந்துகொண்டிருந்ததால், அப்போதைய முதல்வராக இருந்த பிரதமர் மோடியின் விடுதலையை நேற்று உச்ச நீதிமன்றம் உறுதி செய்த நிலையில், இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளார்.
மோடி மீதான பொய்யான குற்றச்சாட்டின்பொது யாரும் போராட்டத்தில் ஈடுபடவில்லை என கூறிய அமித்ஷா, ராகுல் காந்தி மீதான பணமோசடி வழக்கில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்துவதாக விமர்சித்தார்.
மேலும், குஜராத் கலவர வழக்கில் பிரதமர் மோடியை மிகவும் ஆழமாக பார்த்திருக்கிறேன். அவர் வலிகளை சகித்துக்கொண்டார். அவர் மீதான குற்றச்சாட்டை சட்டதிட்டத்தின் அடிப்படையிலும், நீதிமன்றத்தின் வழியாகவும் எதிர்கொண்ட அவர் எதுவுமே பேசவில்லை.. வலிமையான இதயம் கொண்டவர்களால் மட்டுமே இப்படி இருக்க முடியும் என அமித்ஷா உருக்கமாக பேசினார்.
சிறந்த உதாரணம் பிரதமர் மோடி:
இந்த ஜனநாயக நாட்டில் நாட்டின் அரசியல் சாசன சட்டத்தை எப்படி எல்லா அரசியல்வாதிகளாலும் மதிக்கவேண்டும் என்பதற்கு சிறந்த உதாரணமாக பிரதமர் மோடி திகழ்கிறார். மோடி கேள்வியெழுப்பினார். ஆனால் எந்த ஒரு பாஜகவினரும் நாட்டில் போராடவில்லை. மோடிக்கு ஆதரவாக கூட்டம் கூடவில்லை.நாங்கள் சட்டத்தை மதிக்கிறோம். ஒத்துழைக்கிறோம்.. நான் கைது செய்யப்பட்ட போதும் கூடம் ஒரு போராட்டமும் நடக்கவில்லை என அமித்ஷா தெரிவித்தார்.
குஜராத் கலவரத்தின் போது குஜராத் அரசு தாமதமாக நடவடிக்கை எடுத்ததாக வைத்த குற்றச்சாட்டை மறுத்த அமித்ஷா, குஜராத் அரசின் நடவடிக்கையும், பஞ்சாப் முன்னாள் காவல்துறை அதிகாரி கெபிஎஸ் கில் தலைமையிலான குழுவும் விரைவாகவும் நடுநிலையோடும் குஜராத் கலவரத்தை கையாண்டதாகவும் அவர் தெரிவித்தார்.
காங்கிரசை கடுமையாக விமர்சித்த அமித்ஷா 1984-ல் நடைபெற்ற சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் பல்வேறு சீக்கியர்கள் கொல்லப்பட்டதாகவும், அப்போது கலவரம் நடந்த 3 நாட்கள் காங்கிரஸ் அரசு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் சாடினார்.
குஜராத் கலவரத்தை பொறுத்தவரையில் அப்போது மாநில அரசு எதிலும் தாமதம் காட்டவில்லை. குஜராத் முழுவதும் ஊரடங்கு விதிக்கப்பட்டது. ராணுவத்தினர் அழைக்கப்பட்டனர். அப்போது இராணுவ வீரர்கள் வருவதற்கு சற்று நேரம் தேவைப்பட்டது. ஆனால் குஜராத் அரசு தாமதம் காட்டவில்லை. விரைவாக நடவடிக்கை எடுத்ததால் நீதிமன்றமே குஜராத் அரசை அப்போது பாராட்டியது” என தெரிவித்தார்