மக்களவைத் தேர்தல் தேதியை இன்று பிற்பகல் 3 மணிக்கு அறிவிக்கிறது இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்கப்படவுள்ளது.
வரும் ஜூன் 16 ஆம் தேதியுடன் பாராளுமன்ற மக்களவையின் பதவிக்காலம் நிறைவடைய உள்ளது. இதே போன்று அருணாச்சல பிரதேசம், ஆந்திரா, ஒடிசா, சிக்கிம் மாநில சட்டப்பேரவைகளின் பதவிக்காலம் ஜூன் மாதத்தில் பல்வேறு தேதிகளில் நிறைவடைய உள்ளது.
அதற்கு முன்னதாக மக்களவைக்கும், நான்கு மாநில சட்டப்பேரவைகளுக்கும் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
இதையும் படிங்க: கோவையில் பிரதமரின் ‘Road show’-க்கு அனுமதி- சென்னை உயர் நீதிமன்றம்!
இதற்கான தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தமிழ்நாடு,ஆந்திரா, ஒடிசா, உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மாநில வாரியான கள ஆய்வில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டது.
மேலும் மக்களவைத் தேர்தலுடன் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கான தேர்தல் நடத்தலாமா என்பது குறித்தும் இந்த ஆய்வில் தேர்தல் ஆணையம் ஆலோசனை மேற்கொண்டது.
இந்த நிலையில், மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் தேதி இன்று பிற்பகல் மூன்று மணிக்கு அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மற்றும் புதிதாக தேர்வு செய்யப்பட்ட தேர்தல் ஆணையர்கள் சுக்வீர் சிங் சந்து, கியானேஷ் குமார் ஆகியோர் கூட்டாக தேர்தல் தேதியை அறிவிக்க உள்ளனர்.
மக்களவை தேர்தலுடன் அருணாச்சல பிரதேசம், ஆந்திரா, ஒடிசா, சிக்கிம் மாநில பேரவைகளுக்கான தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட உள்ள நிகழ்வு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.