பஞ்சாப் முன்னாள் முதலமைச்சரும், சிரோமணி அகாலி தளத்தின் (எஸ்ஏடி) புரவலருமான பிரகாஷ் சிங் பாதல் இன்று காலமானார்.அவருக்கு வயது 95 ஆகும்.
“பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் எஸ் பிரகாஷ் சிங் பாதல், மூச்சுக்குழாய் ஆஸ்துமாவின் தீவிரத்தால் 16 ஏப்ரல் 2023 அன்று மொஹாலி ஃபோர்டிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதனை தொடர்ந்து அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு இரைப்பை அழற்சி மற்றும் ஆஸ்துமா இருந்தது தெரியவந்துள்ளது. இதனால் அவருக்கு மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மேலும் அவரது சுவாச நிலை மோசமடைந்ததால் கடந்த ஏப்ரல் 18 ஆம் தேதி மருத்துவ ஐசியுவுக்கு மாற்றப்பட்டார்”.இதனையடுத்து தொடர் மருத்துவகண்காணிப்பில் இருந்த வந்த பிரகாஷ் சிங் பாதல் செவ்வாய்க்கிழமை பகலில் அவரது உடல்நிலை திடீரென மோசமடைந்து சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
5 முறை முதலமைச்சராக இருந்த பிரகாஷ் சிங் பாதல், மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக கூட்டணியில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.
இவரின் மறைவை ஒட்டி, தேசிய அளவில் இரண்டு நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
மேலும் பிரதமர் மோடி,
ஸ்ரீ பிரகாஷ் சிங் பாதல் ஜியின் மறைவு மிகவும் வருத்தமளிக்கிறது. அவர் இந்திய அரசியலின் மகத்தான ஆளுமை மற்றும் நமது தேசத்திற்கு பெரிதும் பங்களித்த ஒரு குறிப்பிடத்தக்க அரசியல்வாதி. அவர் பஞ்சாபின் முன்னேற்றத்திற்காக அயராது உழைத்தவர் என மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து ஜனாதிபதி திரௌபதி முர்மு உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் இரங்கல் தெரிவித்துள்ளனர்.