மயிலாடுதுறை அருகே நீடூரில் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்துடன் தொடர்புடையதாக சாதிக் பாஷா என்ற இக்காமா பாஷா உட்பட 5 பேரை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு சமீபத்தில் தேசிய புலனாய்வு பிரிவின் விசாரணைக்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கில் தொடர்புடைய நபர்களுக்கு சொந்தமான இடங்களில் தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கைது செய்யப்பட்ட நபர்களின் உறவினர்களிடம் சில ஆவணங்களை காட்டி விளக்கம் கேட்டதாக கூறப்படுகிறது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் நீடூர், எலந்தங்குடி, அரிவேலூர், கிளியனூர், உத்திரங்குடி ஆகிய ஐந்து இடங்களில் அதிரடி சோதனை நடைபெற்றது.சென்னையிலிருந்து வந்திருந்த எஸ் பி ஸ்ரீஜித் தலைமையில் ஐஎன்ஏ அதிகாரிகள் ஐந்து குழுக்களாக பிரிந்து தனித்தனியாக சோதனையில் ஈடுபட்டனர்.
உத்திரங்குடியில் ஜெகபர் சாதிக் என்பவரது வீட்டில் சோதனை நடைபெற்றது.இது போல் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் சுண்ணாம்பு கார வீதியிலுள்ள ஒரு வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.