தேசிய செஸ் வீரர்கள் (National Players) தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்திருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த இளம் வீரர் பிரக்ஞானந்தா அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவிதுள்ளார்.
2024 டாடா ஸ்டீல் செஸ் போட்டியில் உலக சாம்பியனான டிங் லிரனை வீழ்த்தியதன் மூலம், பிரக்ஞானந்தா தேசிய தரவரிசைப் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.
இந்தியாவில் இளம் கிராண்ட் மாஸ்டர்களில் ஒருவர் ஆன பிரக்ஞானந்தா தற்போது நம்பர் ஒன் செஸ் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
அவருக்கு தற்போது வயது 18. இளம் வயதில் இந்த சாதனையை படைத்துள்ள பிரஞானந்தவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
இதையும் படிங்க : https://x.com/Udhaystalin/status/1747594849736614146?s=20
டாடா ஸ்டீல் செஸ் போட்டியில் நடப்பு உலக சாம்பியனான டிங் லிரனை வீழ்த்தியதன் மூலமாக பிரக்ஞானந்தா இந்திய செஸ் தரவரிசைப் பட்டியலில் விஸ்வநாதன் ஆனந்தை பின்னுக்கு தள்ளி நம்பர் ஒன் இடம் பிடித்துள்ளர் என்பது குறிபிடத்தக்கது.
இதுக்குறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிதிருப்பதாவது..
தேசிய செஸ் வீரர்கள் தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்திருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த இளம் வீரர் பிரக்ஞானந்தா அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
நெதர்லாந்தில் நடைபெற்று வரும் டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் தொடரில் நடப்பு உலகச் சாம்பியனான சீனாவின் டிங் லிரனை வீழ்த்தியதன் மூலம்,
இந்திய செஸ் வீரர்கள் (National Players) தரவரிசைப் பட்டியலில் பிரக்ஞானந்தா முதன்முறையாக முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.
இளம் வயதிலேயே சதுரங்க உலகில் புதிய அத்தியாயத்தை தொடங்கி அதில் வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கும் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் பிரக்ஞானந்தா அவர்கள் உலகளவில் அடுத்தடுத்து பல்வேறு வெற்றிகளை குவிக்க வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என கூறியுள்ளார்.
இதையும் படிங்க : https://x.com/TTVDhinakaran/status/1747529111671816424?s=20
மேலும், விஸ்வநாதன் ஆனந்திற்கு பிறகு நடப்பு உலக செஸ் சாம்பியனை வீழ்த்திய 2ஆவது வீரர் என்ற சாதனையை பிரக்ஞானந்தா படைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.