பொது பெட்டியில் பயணிக்கும் ரயில் பயணிகளுக்கு 20 ரூபாய்க்கு தரமான உணவு வழங்கும் திட்டத்தை ரயில்வே துறை( Indian Railways) தொடங்கியுள்ளது.
ரயிலில் பொது பெட்டிகளில் பயணிக்கும் பயணிகள் உணவு, குடிநீர் உள்ளிட்டவற்றை ரயில் நிலையங்களில் கூடுதல் விலைகொடுத்து வாங்க வேண்டி இருக்கிறது.
இந்த நிலையில்,வடக்கு மண்டலத்தில் உள்ள 59 ரயில் நிலையங்களில் மலிவு விலைக்கு உணவு வழங்க ரயில்வே(Indian Railways) முடிவு செய்துள்ளது.முதற்கட்டமாக 14 ரயில் நிலையங்களில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
அதன்படி, முன்பதிவில்லாத பொது பெட்டிகள் நிற்கும் நடைமேடைகள் அருகே, இதற்காக கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.7 பூரிகள் மற்றும் உருளைக்கிழங்கு, ஊறுகாய் அடங்கிய மலிவு விலை உணவு 20 ரூபாய்க்கும்,
அரிசி சாதம், கிச்சடி, மசாலா தோசை உள்ளிட்டவற்றில் ஏதேனும் ஒன்று காம்போ உணவு வகையாக 50 ரூபாய்க்கும் விநியோகம் செய்யப்படுவதாக வடக்கு ரயில்வே(Indian Railways) பி.ஆர்.ஓ.ராஜேஷ் காரே தெரிவித்துள்ளார்.