திருப்பதியில் ஏழுமலையானை தரிசிக்க வந்த பக்தர் ஒருவர் தனது குடும்பத்துடன் ஏழுமலையான் உருவம் பொறித்த பெரிய தங்க டாலரை கழுத்தில் அணிந்திருந்த சம்பவம் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.
ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் திருக்கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலுக்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம்.
அந்த வகையில் திருப்பதி ஏழுமலையான் மீது கொண்ட பற்றால் பக்தர்கள் சிலர் ஏழுமலையான் புகைப்படத்தை டாட்டூ போட்டு கொள்வார்கள். பலரும் பலவிதமாக ஏழுமலையானை தரிசிக்கின்றனர்.
இந்த நிலையில்,கடந்த சில நாட்களுக்கு முன் மருத்துவர் கீதப்பிரியா என்பவர் புடவை ப்ளவுஸில் ஏழுமலையான் உருவத்தை பொறித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வைரலானது.
இதனை தொடர்ந்து மத்திய பிரதேசத்தை சேர்ந்த சோனி நானுராம் தய்ராம் என்ற பக்தர், தனது குடும்பத்துடன் ஏழுமலையானை தரிசிக்க திருப்பதிக்கு சென்றிருந்தார்.
அப்போது குடும்பத்தோடு கழுத்தில் தங்கத்தில் ஏழுமலையான், லட்சுமி உருவத்துடன் கூடிய டாலரை கழுத்தில் அணிந்திருந்தனர்.பல பலவென தங்க நிறத்தில் இவர்களின் கழுத்தில் மின்னும் ஏழுமலையான் பலரையும் திரும்பி பார்க்க செய்தது.
இவர்கள் குடும்பத்துடன் அணிந்திருக்கும் இந்த நகையின் எடை 30 முதல் 50 சவரன் ஆகும்.தற்பொழுது இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.