சமூக வலைதளங்களில் தேசிய அளவில் #ShameonBJP என்ற ஹேஷ்டாக் டிரெண்டாகி வருகிறது.
சமீப காலமாக வணிகம் மற்றும் வீட்டு உபயோக சிலிண்டர்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வரிகின்றன. இதனால் சாமானிய குடும்பத்தினர் மற்றும் வணிக நிறுவனங்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப சமையல் கேஸ் சிலிண்டர் மற்றும் விமான எரிபொருள் விலை 15 நாட்களுக்கு ஒரு முறை மாறுபடும்.
அந்த வகையில் ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மற்றும் வர்த்தக சிலிண்டர் விலை விலையில் மாற்றம் ஏற்படும் . அதன்படி கடந்த ஏப்ரல் மாதம் வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.965.50 காசுகளாக இருந்தது. சிலிண்டர் விலை உயர்வு அதேபோல் மே மாதம் சிலிண்டர் விலை தொடக்கத்தில் ரூ.50 உயர்த்தப்பட்டது.
இதன் மூலம் சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூ.1, 015.50க்கு விற்பனையாகி வந்தது. பிறகு அதே மாதத்தில் மீண்டும் ரூ.3 உயர்த்தப்பட்டு, 14.2 கிலோ சிலிண்டர் ரூ. 1,018.50க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஜூன் மாதத்தில் சிலிண்டர் விலை மாற்றமில்லாமல் இருந்து வந்தது.
இந்நிலையில் சென்னையில் 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சமையல் சிலிண்டர் விலை ரூ. 50 உயர்த்தப்பட்டு, ரூ. 1,068.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் ரூ.50 உயர்ந்துள்ளது நடுத்தர மற்றும் சாமானிய மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வுக்கு பொதுமக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில். டுவிட்டரில் #ShameonBJP என்ற ஹேஷ்டாக் டிரெண்டாகி வருகிறது. கடந்த 2011 ஆண்டு காங்கிரஸ் ஆட்சியின் போது கேஸ் விலை உயர்த்தப்பட்டதற்கு போராட்டம் செய்த பாஜக தலைவர்கள் இப்போது எங்கே போனார்கள்? என கேள்வியெழுப்பி வருகின்றனர்.
2014 ஆம் ஆண்டு மக்கள்வை தேர்தல் பிரச்சாரத்தின்போது பிரதமர் மோடி அப்போதைய காங்கிரஸ் அரசை கடுமையாக விமர்சித்தார். அதுமட்டுமல்லாமல் மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இராணி கடந்த 2011 ஆம் ஆண்டு காங்கிரஸ் அரசுக்கு எதிராக சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து நடைபெற்ற போராட்டம் நடத்திய புகைப்படத்தை தற்போது டிரெண்ட் செய்து நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
There’s either a tweet or a video of CM Modi calling out #PMModi #ShameOnBJP @KTRTRS pic.twitter.com/ejrbQFYHeI
— Jagan Patimeedi (@JAGANBRS) July 7, 2022
தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்வு, கேஸ் விலை உயர்வு, அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு, அத்தியவாசிய பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி என தொடர்ந்து சாமானிய மக்களை பாதிக்கும் வகையில் மத்திய அரசு செயல்பட்டு வருவதாக காங்கிரஸ் உட்பட பல்வேறு எதிர்கட்சிகள் விமர்சித்து வருகின்றனர். அதன் ஒருபகுதியாக #ShameonBJP என்ற ஹேஷ்டாக் தேசிய அளவில் டிரெண்டாகி வருகிறது.