ஸ்பெயின் நாட்டின் மாட்ரிடில் நேட்டோ அமைப்பின் உச்சி மாநாடு நேற்று நடைபெற்றது.இதனால் உலகம் முழுவதும் பல்வேறு தாக்குதல்கள், வன்முறைச்சம்பவங்கள் மற்றும் கால நிலை மாற்றம் உள்ளிட்ட ஆபத்தான நிலையில் உலகம் சந்தித்து வருகிறது.
இந்த நிலையில் நேட்டோ எச்சரிக்கை வெளியிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.நேட்டோ உறுப்பினர் நாடுகளாக சுவீடன் மற்றும் பின்லாந்து நாடுகள் இணைவதற்கு துருக்கி தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதில் தொடர்புடைய நாடுகளின் தலைவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து, துருக்கி தனது எதிர்ப்பு நிலைப்பாட்டை கைவிட்டது.
இதனையடுத்து, நேட்டோ அமைப்பில் சுவீடன் மற்றும் பின்லாந்து நாடுகள் இணைவதற்கு முறைப்படி அழைப்பு விடுத்தனர். இந்த நிலையில், நேட்டோவில் சுவீடன் மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகள் இணைவது பற்றி ரஷியா கவலை கொள்ளவில்லை. அவர்கள் சேர விரும்பினால் சேர்ந்து கொள்ளட்டும். ஆனால், ஒன்றை தெளிவாகவும், சரியாகவும் புரிந்து கொள்ள வேண்டும்.
இதற்கு முன்வரை அந்த பகுதிகளில் இருந்து அச்சுறுத்தல் எதுவும் இல்லை. ஒருவேளை, அந்த பகுதிகளில் ராணுவ படைகள் குவிக்கப்பட்டாலோ அல்லது ராணுவ உட்கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டாலோ, எங்களுக்கு எதிராக அச்சுறுத்தல் விடப்பட்டால், அதற்கு எங்கள் தரப்பில் இருந்து பதிலடி தரப்படும். என ரஷிய அதிபர் புதின் எச்சரிக்கை விடுத்தார்.
மேலும் இது தொடர்பாக நேட்டோ அமைப்பை குறித்து சீனா அரசு தெரிவிக்கையில்,நேட்டோ அமைப்பானது நாட்டை தீங்கான வகையில் தாக்கி அவதூறு செய்கிறது.மேலும் நேட்டோ அமைப்பு மற்ற ஐரோப்பிய நாடுகளிடம் சவால்களை விடுவதால் இதனால் மற்ற நாடுகளுடன் பிரச்சனை உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.