“இறைவன் ட்ரைலர்.. நயன்தாரா போர்ஷன் தான் படு மொக்கை.. ரசிகர்கள் ட்ரோல்!!

இயக்குநர் அகமத் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி உள்ள இறைவன் படத்தின் மிரட்டலான ட்ரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது. படத்தில் கதாநாயகியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, ராகுல் போஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்நிலையில், சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் புதிய அக்கவுன்ட் தொடங்கிய நடிகை நயன்தாரா ஜவான் படத்திற்கு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புரமோஷன் செய்தார். இந்நிலையில் நயன்தாரா நேற்று வெளியான ஜெயம் ரவியின் இறைவன் படத்தின் ட்ரெய்லரை மட்டும் ஏன் புரமோட் செய்யவில்லை என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

முன்னதாக, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஒரு மணி நேரம் கால் கடுக்க நின்று பேசி ப்ரோமோஷன் செய்தார். ஆனால், லேடி சூப்பர்ஸ்டார் என கொண்டாடப்படும் நடிகை நயன்தாரா தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தில் உருவாகும் படங்களின் புரமோஷனுக்கு மட்டும் வருகிறார் என்றும், மற்ற திரைப்படங்களின் புரமோஷனுக்கு செல்வதில்லை என்றும் குற்றச்சாட்டுக்கள் எழுந்து வருகின்றன.

மேலும், சமீபத்தில் ஷாருக்கான் மும்பையில் இருந்து சென்னைக்கு வந்து தனது ஜவான் படத்தின் புரமோஷனுக்காக மேடையில் அனிருத்துடன் ஆட்டம் போட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். ஆனால், நடிகை நயன்தாரா பெயருக்கு கூட அதில் கலந்து கொள்ளவில்லையே என்கிற விமர்சனங்களும் கிளம்பின.

இந்நிலையில் தான் திடீரென இன்ஸ்டாகிராமில் புதிய கணக்கை தொடங்கிய நயன்தாரா அந்த படத்தின் டிரெய்லரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு புரமோட் செய்திருந்தார். மேலும், இதுபோன்று இனி வரும் அனைத்து படங்களுக்கும் நயன்தாரா இன்ஸ்டாகிராமில் புரமோஷன் செய்வார் என கோலிவுட் பிரபலங்கள் நினைத்துக் கொண்டிருந்தனர்.

ஆனால், நேற்று வெளியான ஜெயம் ரவியின் இறைவன் டிரெய்லரை நயன்தாரா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புரமோட் செய்யவில்லை என்பதை அறிந்த ரசிகர்கள் அப்செட் ஆகி உள்ளனர்.

இந்நிலையில், ஜவானுக்கு மட்டும் புரமோஷன் செய்த நயன்தாரா ஜெயம் ரவி நடிப்பில் வெளியான இறைவன் படத்துக்கு ஒரு போஸ்ட் போட்டால் என்ன குறைந்தா போய் விடுவார்? என்றும், இறைவன் டிரெய்லரில் நயன்தாரா போர்ஷன் தான் படு மொக்கையாக இருக்கிறது என்றும் ட்ரோல் செய்து வருகின்றனர்.

Total
0
Shares
Related Posts