நடிகை நயன்தாராவுக்கு எதிராக நடிகர் தனுஷ் தொடர்ந்த வழக்கின் விசாரணையை ஜனவரி 8 ஆம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
பிரபல OTT தளமான நெட்ஃப்ளிக்ஸில் வெளியான nayanthara beyond the fairy tale ஆவணப்படத்தில் தனது அனுமதியின்றி ‘நானும் ரௌடிதான்’ பட காட்சிகள் இடம்பெற்றதற்கு ₹10 கோடி இழப்பீடு கேட்டும், காட்சிகளை பயன்படுத்த தடை கோரியும் நடிகர் தனுஷ் வழக்கு தொடர்ந்திருந்தார் .
இந்த வழக்கை இன்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் நயன்தாரா, விக்னேஷ் சிவன், நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் ஆகியோர் பதிலளிக்கும்படி உத்தரவிட்டுள்ளது.
Read Read : என்னையும் கோபப்பட வச்சுடீங்களே – தொடர் வதந்திகளால் பொங்கி எழுந்த நடிகை சாய் பல்லவி..!!
இதன்காரணமாக நயன்தாராவுக்கு எதிராக தனுஷ் தொடர்ந்த வழக்கில் இடைக்கால தடைக் கோரிய மனு மீதான விசாரணையை ஜன.8ம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
தனது ஆவண படத்தில் நானும் ரௌடிதான் படத்தின் காட்சிகளை பயன்படுத்த நடிகர் தனுஷிடம் அனுமதி கேட்டு 2 வருடம் காத்திருந்த நிலையில் அனுமதி கிடைக்காததால் நானும் ரௌடிதான் படப்பிடிப்பின்போது செல் போனில் எடுக்கப்பட்ட காட்சியினை பயன்படுத்தியத்திற்கு தனுஷ் 10 கோடி இழப்பீடு கேட்பது அதிர்ச்சியையும் வேதனையும் அளிப்பதாக நடிகை நயன்தாரா 3 பக்க அறிக்கையில் கூறிருந்தது குறிப்பிடத்தக்கது.