பறவை காய்ச்சல் எதிரோலி – நீலகிரி சோதனை சாவடிகளில் கிருமி நாசினி தெளிப்பு..!

பறவை காய்ச்சல் நோய் எதிரோலியாக கேரளா,கர்நாடக உட்பட வெளி மாநிலங்களிலிருந்து நீலகிரி மாவட்டத்திற்குள் வரும் வாகனங்களுக்கு சோதனைச் சாவடிகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகளை நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

தற்போது கேரளா மாநிலத்தில் விரைவாக பரவிவரும் பறவை காய்ச்சல் அண்டை மாநில மாவட்டமான நீலகிரிக்குள் பரவுவதை தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் ப‌ல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதில் முதல் கட்டமாக நீலகிரி மாவட்டம் கேரளா மற்றும் கர்நாடக எல்லை பகுதியான நாடுகாணி ,கக்கநல்லா சோதனை சாவடிகளில் பறவை காய்ச்சல் தடுக்கும் வகையில் வெளி மாநிலங்களிலிருந்து நீலகிரி மாவட்டத்திற்கு வரும் அனைத்து வாகனங்களுக்கும் கிருமிநாஷினி தெளிக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியர் ‘அம்ரித்’ நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட தற்கான சான்றிதழ்களை கட்டாயமாக சோதனை செய்து கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தினர்.

மேலும் விடு முறை நாள் என்பதால் வெளி மாநிலங்களிலிருந்து உதகைக்கு அதிகளவில் சுற்றுலா பயணிகள் வாகனங்களில் வருவதால் ஒன்றுக்கு மேற்பட்ட கிருமிநாஷினி தெளிக்கும் பணியாட்களை பணியில் ஈடுபடுத்த வேண்டும் இதனால் காலதாமதத்தை தவிர்க்கலாம் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Total
0
Shares
Related Posts