யூ-டியூப் பார்த்து மனைவிக்கு பிரசவம் பார்த்த கணவர் – குழந்தை இறப்பு

Ranipettai-Wife-gives-birth-after-watching-YouTube
Ranipettai Wife gives birth after watching YouTube

யூ-டியூப் பார்த்து, கணவன் தனது மனைவிக்கு பிரசவம் பார்த்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த பனப்பாக்கம், நெடும்புலி கிராமத்தைச் சேர்ந்தவர் வியாபாரி லோகநாதன். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கோமதி என்ற பெண்ணுக்கும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவரது மனைவி கோமதிக்கு கடந்த 13-ஆம் தேதி பிரசவம் பார்க்க மருத்துவர்கள் நாள் குறித்துள்ளனர்.

குறிப்பிட்ட நாளில் பிரசவ வலி வராத நிலையில், கடந்த 18-ஆம் தேதி மாலை கோமதிக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், லோகநாதன் தனது அக்கா கீதாவின் உதவியுடன் யூ-டியூபை பார்த்து அதன்படி பிரசவம் பார்த்ததாக கூறப்படுகிறது.

இதில், இறந்த நிலையில் ஆண் குழந்தை பிறந்ததோடு மனைவிக்கு அதிக அளவு இரத்தப் போக்கு ஏற்பட்டு மயங்க்கமடைந்துள்ளார். இதனை அடுத்து தனது அக்காவின் உதவியுடன் மனைவி மற்றும் இறந்த குழந்தையை எடுத்துக்கொண்டு புன்னை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றுள்னார் லோகநாதன்.
அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட கோமதி பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Ranipettai-Wife-gives-birth-after-watching-YouTube
Ranipettai Wife gives birth after watching YouTube

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து மாவட்ட சுகாதாரத் துணை இயக்குனர் மணிமாறன் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
மேலும் புன்னை ஆரம்ப சுகாதார மருத்துவ அலுவலர் மோகன், நெமிலி காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்ததை அடுத்து, லோகநாதனிடம் நெமிலி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இது போன்ற சம்பவங்கள் ஏற்கனவே நடைபெற்றுள்ள நிலையில், மருத்துவர்கள் கண்காணிப்பில் தான் பிரசவம் நடக்க வேண்டும் என்று ஏற்கனவே அறிவித்திருந்தும் பலர் இன்னும் யூடியூபே பார்த்து குழந்தை பெற்றுக் கொள்ளும் முயற்சியில் ஈடுபடுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Total
0
Shares
Related Posts