நீட் தேர்வு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி (Rahul Gandhi) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ராகுல் காந்தி வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது..
“நீட் தேர்வு குறித்தும், வினாத்தாள் கசிவு தொடர்பாகவும் அரசுடன் ஆக்கப்பூர்வமாக விவாதம் நடத்த ‛ இந்தியா ‘ கூட்டணி விருப்பம் தெரிவித்தது.
ஆனால், துரதிர்ஷ்டவசமாக நாடாளுமன்றத்தில் விவாதம் செய்ய நாங்கள் அனுமதிக்கப்படவில்லை.
நீட் தேர்வு சர்ச்சை இந்தியா முழுவதும் உள்ள லட்சகணக்கான குடும்பங்களுக்கு கவலையை ஏற்படுத்தும் முக்கியமான ஒரு விஷயம்.
இந்த விவகாரம் குறித்து விவாதம் நடத்த வேண்டும் எனவும், மாணவர்களுக்கு உரிய மரியாதையை அளிக்க வேண்டும் என பிரதமர் மோடியை வலியுறுத்துகிறேன்” என்று கூறியுள்ளார் Rahul Gandhi.
இதனிடையே, நீட் தேர்வு குறித்து விவாதிக்க தயார் என்றும், ஆனால் அந்த விவாதம் ஒழுக்கமாக நடைபெற வேண்டும் எனவும் மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் (Union Education Minister) தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.