நாடு முழுவதும் நேற்று நடைபெற்ற நீட் தேர்வின்போது ராஜஸ்தானில் வினாத்தாள் கசிந்ததாக ( question paper leak ) கூறப்படும் தகவலில் துளிகூட உண்மையில்லை என தேசிய தேர்வுகள் முகமை விளக்கம் அளித்துள்ளது.
மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான நீட் தேர்வு நாடு முழுவதும் நேற்று 557 நகரங்களில் நடைபெற்றது . நேற்று பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை நடைபெற்ற இந்த தேர்வை எழுத சுமார் 24 லட்சம் பேர் தேர்வு பதிவு செய்திருந்தனர் .
இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் நீட் தேர்வு முடிவதற்கு முன்பே, வலுக்கட்டாயமாக தேர்வறைகளிலிருந்து வெளியேறிய மாணவர்களால் வினாத்தாள் கசிந்ததாக தகவல் பரவ இத்தேர்வு குறித்து நாடு முழுவதும் பல கருத்துக்கள் உலா வர தொடங்கியுள்ளது.
Also Read : மக்களவைத் தேர்தலுக்கான 3ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது..!!
ராஜஸ்தான் மாநிலத்தில் அமைக்கப்பட்ட ஒரு பெண்கள் மேல்நிலைப் பள்ளி தேர்வுக் கூடத்தில், ஹிந்தியில் தேர்வெழுத வந்த மாணவர்களுக்கு ஆங்கில வினாத்தாள் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதனை உடனடியாக மாற்றிக்கொடுக்க தேர்வுக் கண்காணிப்பாளர்கள் முன்வந்தனர். ஆனால், அந்த மாணவர்கள் திடீரென வினாத்தாள்களுடன் தேர்வறையிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேறியுள்ளனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், தேர்வு முடிந்தபிறகுதான் மாணவர்கள் தேர்வறையிலிருந்து வெளியேற வேண்டும் என்பது விதிமுறை. ஆனால், வலுக்கட்டாயமாக வெளியேறிய மாணவர்களால் மாலை 4 மணியளவில் சமூக வலைத்தளங்களில் நீட் வினாத்தாள் கசிந்துள்ளது.
வினாத்தாள் கசிவதற்குள் அனைத்து நீட் தேர்வு மையங்களிலும் தேர்வுகள் தொடங்கிவிட்டிருந்தன. ( question paper leak ) எனவே, நீட் வினாத்தாள் தேர்வுக்கு முன்பே கசிந்ததாக பரப்பப்படும் தகவலில் உண்மையில்லை என்று தேசிய தேர்வு முகமை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.