உயிர் பலி கேட்கும் நீட் NEET தேர்வை ஒழிக்கும் வரை போராட்டம் தொடரும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிதித்ருப்பதாவது..
காங்கிரசும், திமுக-வும் மத்தியில் நடத்திய கூட்டணி ஆட்சியில், திரு. குலாம் நபி ஆசாத்தும், திமுக-வின் திரு. காந்திசெல்வனும் மந்திரிகளாக இருந்து போட்ட விதை.
இன்று விஷ விருட்சமாக மாறி, பல அப்பாவி மாணவ, மாணவிகளின் உயிரிழப்புக்குக் காரணமான நீட் தேர்வை ஒழிப்போம் என்று தீர்மானம் நிறைவேற்றியது கொலை பாதக நாடகமாகும்.
நாடகத்தின் புதிய பரிணாமமாக நீட் NEET நுழைவுத் தேர்வு எதிர்ப்பு கையெழுத்து அட்டைகள் சுமார் 50 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களிடம் கையெழுத்துகள் வாங்கிய அட்டைகள் மாநாட்டில் காற்றில் பரந்ததையும்,
மாநாட்டு அரங்கம் முழுவதும் குப்பையோடு குப்பையாக கலந்து இருந்ததையும் சமூக ஊடகங்கள் மூலம் நாட்டு மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டின.
இதையும் படிங்க : Ramayanam : 14 ஆண்டுகள் இவர் தூங்கவில்லையாம்.. ராமாயணத்தின் சில சுவாரஸ்ய தகவல்கள்!!
இப்படி கிடந்த கையெழுத்து அட்டைகளை டெல்லிக்கு அனுப்புவோம் என்று மேலும் ஒரு நாடகம். இத்தீர்மானத்தைப் பார்க்கும் போது. ‘எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே’ என்ற பாடல் நினைவுக்கு வருகிறது.
ஆளுநர் பதவி என்ற தொங்கு சதையை நிரந்தரமாக அகற்றுவது ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான தீர்வு என்று இந்த மாநாடு தீர்மானிக்கிறது என வாய்ஜாலம் காட்டப்பட்டுள்ளது.
ஏறத்தாழ, 18 ஆண்டு காலம் மத்தியில் காங்கிரசோடும். பா.ஜ.க-வோடும் மாறி, மாறி ஆட்சியில் இருந்த போது, ஆளுநர் பதவிகளை ஒழிக்காமல் இருந்துவிட்டு, இப்போது ‘குருட்டுப் பூனை விட்டத்தில் பாய்வது போல்’ பாய்வது விந்தையானது.
“அமலாக்கத் துறை உள்ளிட்ட அமைப்புகளை கைப்பாவையாக்கி பா.ஜ.க-வை எதிர்க்கின்ற மாநிலக் கட்சிகள் மீது வழக்குகளைப் பாய்ச்சுகின்ற மத்திய அரசைக் கண்டிக்கிறோம்” என்ற தீர்மானத்தின் மூலம், திட்டம் போட்டுத் திருடும் கூட்டம் தங்கள் முகமூடியை தாங்களே கிழித்துத் தொங்கவிட்டுக் கொண்டுள்ளனர்.
சிறைக்குப் போகக் காத்திருக்கும் மேலும் சில மந்திரிகள், கொள்ளையடித்த 30,000 கோடியை பாதுகாப்பது எப்படி என்று தலிக்கும் மகன், மருமகன் ஆகியோரின் தில்லு முள்ளுகளை சேலத்தில் நடத்திய கபட நாடகங்கள் மூலம் மறைத்துவிடலாம் என்று திரு. மு.க. ஸ்டாலின் மனப்பால் குடிக்கிறார்.
விழிப்படைந்ததோடு, கொதிப்படைந்தும் போயுள்ளனர். மக்கள் விரோத இந்த தில்லு முல்லு திமுக-விற்கு வரும் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.
சேலத்தில் திமுக இளைஞர் அணி மாநில மாநாடு நடைபெற உள்ளதாகக் கூறி, மாநிலம் முழுவதும் திமுக மாவட்டச் செயலாளர்கள், ஒன்றிய, நகர, பேரூராட்சி செயலாளர்கள், திமுக நிர்வாகிகள் அனைவரும் அவரவர் பகுதிகளில் உள்ள கடைகள்,
தொழிற்சாலைகள், வியாபாரிகள் மற்றும் தொழிலதிபர்களிடமும் வசூல் வேட்டை நடத்தி உள்ளனர்.
குறிப்பாக, பல இடங்களில் தனியார் மருத்துவமனைகளிலும் வசூல் வேட்டை நடத்தியதுதான் இந்த மாநாட்டின் சாதனை என்று பொதுமக்கள் பேசிக்கொள்கின்றனர்” எனத்தெரிவித்துள்ளார்.