நேபாளத்தில் இந்தியர்கள் சென்ற பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
நேபாளத்தில் இந்திய பயணிகள் பேருந்து ஒன்று தனாஹுன் மாவட்டத்தில் உள்ள மர்ஸ்யாங்டி ஆற்றில் விழுந்து நேற்று விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், தற்போது வரை 41 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அதிகாரப்பூர்வ தகவல் கிடைத்துள்ளது.
Also Read : இந்தியாவின் முதல் Reusable ஹைப்ரிட் ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது..!!
UP FT 7623 என்ற உத்தரப் பிரதேச மாநில பதிவெண் கொண்ட பேருந்து பொக்காராவில் இருந்து காத்மாண்டு நோக்கி சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. விபத்து நடந்த இடத்தில மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
நேபாளத்தில் அடிக்கடி பேருந்து விபத்துகள் நடந்து பல உயிர்கள் பலியாகி வரும் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேபாளத்தில் இது பருவமழை காலம் என்பதால் அங்கு பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் ஆங்காங்கே வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் அங்கு நிலச்சரிவு ஏற்படும் அபாயமும் உள்ளதால் அவ்வழியே செல்வோர் கவனமாக செல்ல வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.