நெட்ஃபிக்ஸ் அமெரிக்காவிற்கு வெளியே உள்ள பெரும்பாலான போட்டியாளர்களை விட முன்னணியில் உள்ளது, மேலும் இது உலகின் மிகப்பெரிய ஸ்ட்ரீமிங் சேவையாகும். புதிய வாடிக்கையாளர்களை சிறந்த திட்டங்களுடன் கவர்ந்திழுப்பதன் மூலம், நல்ல வரவேற்பை பெற்றது .
இந்த நிலையில் ,ஓ.டி.டி.தளத்தின் முன்னணி நிறுவனமான நெட்ஃபிளிக்ஸ், நடப்பு ஆண்டின் 2-வது காலாண்டில் சுமார் 10 லட்சம் சந்தாதாரர்களை இழந்திருக்கும் நிலையில், பங்குச்சந்தையிலும் அந்நிறுவனத்தின் பங்குகள் வீழ்ச்சியை சந்தித்துள்ளன.
பயனர்கள் தங்கள் நெட்ஃபிக்ஸ் பாஸ்வர்டை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதே இழப்புக்கு காரணம் என தெரிவித்துள்ளது.
தொடர் வீழ்ச்சியை ஈடுகட்டவும், மேலும் அதிக பயனர்களை தளத்திற்கு கொண்டுவரவும், மலிவு விலை சந்தாவை அறிமுகப்படுத்தி நடுவில் விளம்பரங்களை தோன்ற செய்து வருமானம் ஈட்ட முடிவெடுத்து மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் நெட்ஃபிளிக்ஸ் கை கோர்த்துள்ளது.