உலகின் சிறந்த பவுலர்களில் ஒருவராக திகழ்ந்து வரும் பும்ரா தற்போது மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் நிலையில் தற்போது அவரது மகன் அங்கத் குறித்து நெட்டிசன்கள் கிண்டல் அடித்து வருவதாவும் இதனை நிறுத்திக்கொள்ளவும் பும்ராவின் மனைவி சஞ்சனா காட்டமாக தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் பல மாநிலங்களில் நடப்பாண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது . கோலாகலமாக நடைபெற்று வரும் இந்த தொடரில் கிரிக்கெட் ரசிகர்களை தாண்டி கிரிக்கெட் வீரர்களின் குடும்பம் தவறாமல் கலந்துகொண்டு விளையாட்டை நேரில் கண்டு ரசிப்பது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது.
இந்நிலையில் ஐபிஎல் போட்டியின்போது ஜஸ்பிரிட் – சஞ்சனா இணையரின் மகன் அங்க்த, கை தட்டாமல் சோர்வாக இருந்ததாக இணையத்தில் பலரும் விமர்சித்து வந்ததை அடுத்து சஞ்சனா காட்டமாக வசை பாடியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது :
“எங்கள் மகன் அங்கத், தேசிய அளவில் வெறும் 3 நொடி வீடியோவிற்காக ‘யார், எப்படிப்பட்டவர்’ என வைரல் செய்தியாக்கப்படுவதில் எங்களுக்கு துளியும் விருப்பமில்லை
Depression, Trauma போன்ற வார்த்தைகளை ஒன்றரை வயதான ஒரு குழந்தையின் குணாதிசயங்களுடன் ஒப்பிட்டு பேசுவதை பார்க்கும்போது மிகவும் வருத்தமாக உள்ளது .
எங்களின் மகனை பற்றியோ, எங்கள் வாழ்க்கையை பற்றியோ உங்களுக்கு ஒன்றும் தெரியாது என சஞ்சனா தெரிவித்துள்ளார்.