சென்னை – செங்கோட்டை இடையே ரயில் சேவையில் புதிய மாற்றங்களை செய்துள்ள ரயில்வே நிர்வாகம் அதன் விவரங்களை வெளியிட்டுள்ளது.
தாம்பரம் ரயில் நிலையத்தில் நடைபெறும் பணிகள் காரணமாக ரத்து, பகுதியான ரத்து மற்றும் வழித்தட மாற்ற விபரங்கள் :
பொதிகை விரைவு ரயில் : வரும் 15ம் தேதி சென்னையில் இருந்து புறப்படும் ரயில் விழுப்புரத்திற்கு 30 நிமிடங்கள் தாமதமாக சென்றடையும்.
வரும் 16, 17 தேதிகளில் சென்னை – செங்கல்பட்டு இடையே பகுதியாக ரத்து. செங்கல்பட்டிலிருந்து செங்கோட்டைக்கு கிளம்பும்.
வரும் 14ம் தேதி முதல் 17ம் தேதி வரை செங்கோட்டையில் இருந்து புறப்படும் ரயில், செங்கல்பட்டு வரை மட்டுமே செல்லும்
சிலம்பு விரைவு ரயில் : வரும் 16ம் தேதி சென்னையில் இருந்து புறப்படும் ரயில் விழுப்புரத்திற்கு 30 நிமிடங்கள் தாமதமாக வரும். வரும் 17ம் தேதி முழுமையாக ரயில் சேவை ரத்து
வரும் 15ம் தேதி செங்கோட்டையில் இருந்து கிளம்பும் ரயில் விழுப்புரத்திற்கு 30 நிமிடங்கள் தாமதமாக வந்து செல்லும். வரும் 17ம் தேதி ரயில் சேவை முழுமையாக ரத்து
சென்னை – கொல்லம் விரைவு ரயில் : வரும் 15, 16 மற்றும் 17 தேதிகளில் சென்னையில் இருந்து புறப்பட்டு விழுப்புரத்திற்கு 30 நிமிடங்கள் தாமதமாக வரும்
கொல்லம்-சென்னை விரைவு ரயில் : வரும் 17ம் தேதி கொல்லத்தில் இருந்து புறப்படும் ரயில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் வழியாக சென்னை எழும்பூர் செல்லும். தாம்பரம் செல்லாது என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.