திருவாரூர், திருவள்ளூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, பெரம்பலூர் என புதிய பதிவு மாவட்டங்களாக மேம்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஆட்சி காலத்தில் பெரிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. இந்த மாவட்டங்களில் அமைந்துள்ள 575 சார்பதிவாளர் அலுவலகங்கள் மூலம் பத்திரப்பதிவு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாவட்டங்களை பொறுத்தவரை மக்கள் தொகை அடிப்படையில் சில வருவாய் மாவட்டங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட பதிவு மாவட்டங்கள் உள்ளன.
முதல்வர் ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்றதும் இவை கவனத்தில் கொள்ளப்பட்டு புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படும் என அறிவித்திருந்தார். அதன்படி திருவாரூர், திருவள்ளூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, பெரம்பலூர் என புதிய பதிவு மாவட்டங்களாக மேம்படுத்தப்பட உள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் முதல்கட்டமாக பெரம்பலூர் பதிவு மாவட்டம் உருவாக்கப்பட உள்ளது. இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த மாவட்டத்திற்கான புதிய பணியிடங்கள், நிர்வாக எல்லை, அலுவலகம் அமைப்பதற்கான நிதிகள் உடனடியாக விடுவிக்கப்படவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதே போல் விரைவில் மற்ற 4 பதிவு மாவட்டங்களுக்கான அரசாணையும் விரைவில் வெளியிடப்படும் என அறிவித்துள்ளது. தற்போது தமிழக வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பால் இனி பத்திரப்பதிவுகள் தாமதமின்றி உடனுக்குடன் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.