புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் எம்எல்ஏக்கள் நாளை சட்டமன்ற குழு தலைவர்/ முதலமைச்சரை தேர்ந்தெடுக்கின்றனர்.
சென்னையில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் தொண்டர்கள் பட்டாசு வெடித்து உற்சாகம்.
வெற்றி பெறும் காங்கிரஸ் புதிய எம்எல்ஏக்களை பெங்களூர் அழைத்து வர 12 ஹெலிகாப்டர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
தேவைப்பட்டால் காங்கிரஸ் புதிய எம்எல்ஏக்களை தமிழ்நாட்டிற்கு அழைத்துச் செல்லவும் திட்டம்.
புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் எம்எல்ஏக்கள் அணி மாறாமல் இருக்க மதசார்பற்ற ஜனதா தள கட்சியும் தீவிர நடவடிக்கை.
கர்நாடக தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் டெல்லியில் பாஜக மூத்த தலைவர்களுடன் மத்திய அமைச்சர் அமித்ஷா முக்கிய ஆலோசனை.
கர்நாடகாவில் வெற்றி முகத்தில் உள்ள சுயேச்சை வேட்பாளர்களுக்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது