சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘வேட்டையன்’ படத்தின் (New Poster) புதிய அப்டேட் இன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.
ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடிப்பில் உருவாகி வரும் படம் தான் வேட்டையன்.
பிரம்மாண்ட பொருட் செலவில் லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் ரஜினிகாந்துடன் அமிதாப் பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் உட்பட பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர்.
சமீபத்தில் இப்படத்தின் தலைப்பு குறித்த டீசர் வெளியாகி பட்டையை கிளப்பிய கிளப்பி தலைவரின் ரசிகர்களுக்கு தரமான விருந்து காத்திருக்கிறது என்பதை சொல்லாமல் சொல்லியது.
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பு கேரளா, திருச்சி, சென்னை, திருநெல்வேலி, மும்பை உள்ளிட்ட இடங்களில் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் படம் தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது .
ராக்ஸ்டார் அனிருத் இசை அமைக்கும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இப்படத்தின் அப்டேட் கேட்டு படக்குழுவை ரசிகர்கள் அன்புத் தொல்லை செய்து வந்தனர்.
இந்நிலையில் தற்போது வேட்டையன் படத்தின் முக்கிய அப்டேட் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.
அதன்படி நாளை தை திருநாளை முன்னிட்டு வேட்டையன் படத்தின் புதிய போஸ்டர் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
படக்குழுவின் இந்த அறிவிப்பால் தற்போது தலைவரின் ரசிகர்கள் செம குஷியில் குத்தாட்டம் போட்டு வருகின்றனர்.
இதேபோல் லோகேஷ் கனகராஜ் நடிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தில் இருந்தும் ஒரு தகவல் கிடைத்துள்ளது.
அந்த தகவல் என்னவென்றால் லோகேஷ் மற்றும் ரஜினிகாந்த் காம்போவில் உருவாகும் இப்படத்தில் ரஜினிகாந்துடன் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளதாக ஒரு தகவல் இணையத்தில் கசிந்துள்ளது.
ஏற்கனவே நெல்சன் இயக்கிய ‘ஜெயிலர்’ படத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பதாக முதலில் செய்தி வெளியான நிலையில் அதில் தான் நடிக்கவில்லை என ஓப்பனாக விளக்கம் கொடுக்கப்பட்டது.
Also Read : https://itamiltv.com/tngovt-will-continue-the-bilingual-policy-in-tn/
அதேபோல் லோகேஷ் இயக்கும் படத்தில் தலைவருடன் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்க உள்ளதாகவும் ஒரு தகவல் கிடைத்துள்ளது.
எது எப்படி இருந்தாலும் இதுகுறித்து (New Poster) அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை நாம் காத்திருந்து பார்க்கலாம்.