தமிழகம் முழுவதும் ஊரடங்கு தளர்வுகள் பிப்ரவரி 15ம் தேதி நேற்றுடன் முடிவடைநத நிலையில் இன்று முதல் ஊரடங்கில் புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஊரடங்கில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. தற்போது தமிழகத்தில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. நடைமுறையில் உள்ள ஊரடங்கு தளர்வுகள் பிப்ரவரி 15ம் தேதி நேற்றுடன் முடிவடைநத நிலையில், தற்போது இந்த தளர்வுகள் நீட்டிப்பு மார்ச் 2ம் தேதி வரை நீட்டிக்கப்பட்ள்ளதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
அதே சமயம் வழக்கமான கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி நர்சரி மற்றும் மழலையர் விளையாட்டு பள்ளிகளை இன்று முதல் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் சுமார் 20,000 மழலையர் பள்ளிகளில் இன்று வகுப்புகள் தொடங்குகின்றன.
இதுதவிர இனி, தமிழகம் முழுவதும் உள்ள வழிபாட்டுத் தலங்களில் அனைத்து நாட்களும் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடைகளின் நுழைவு வாயிலில், சுத்திகரிப்பான்கள், உடல் வெப்ப நிலை பரிசோதனை கையாளப்பட வேண்டும். கடைகளில் பணிபுரிபவர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் கட்டாயம் முகக்கவசங்களை அணிய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் சமூக, கலாச்சார மற்றும் அரசியல் கூட்டங்கள் போன்ற பொது மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கான தடை தொடரும். திரையரங்குகளில் 100% பார்வையாளர்களுக்கு அனுமதி திருமணம் மற்றும் அதை சார்ந்த நிகழ்வுகளில் அதிகபட்சமாக 200 பேர் கலந்து கொள்ளலாம். இறப்பு நிகழ்வுகளில் 100 பேர் வரை கலந்து கொள்ள அனுமதி வழங்கப்படுள்ளது.
அத்துடன் பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் கடைப்பிடிக்கப்படுவதை அந்தந்த நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும். தகுதியுள்ள அனைவரும் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அறிவுத்தப்படுள்ளது.