உயர்கல்வி பயில ஆசைப்படும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்காக புதிய திட்டம் ஒன்றை செயல்படுத்த உள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து விளக்கமளித்துள்ள அமைச்சர் கோவி.செழியன் கூறியதாவது :
மாற்றுத்திறனாளி மாணாக்கர்களின் நலனுக்காக, சென்னையில் இயங்கும் பலவகைத் தொழில்நுட்பக் கல்லூரியில் புதிய திறன் பயிற்சி மையம் அமைக்கப்படும்.
Also Read : சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகர் அல்லு அர்ஜுன்..!!
8ஆம் வகுப்பு தேர்ச்சிபெற்று, இரண்டு வருட படிப்பிற்கான தேசிய தரச்சான்றிதழ் பெற்ற மாற்றுத்திறனாளிகள் இந்த பாடப்பிரிவில் சேர்த்து பயிலலாம்.
ஒவ்வொரு பாடப்பிரிவிலும் தலா 30 மாற்றுத்திறனாளி மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதிக்கப்படுவார்கள்.
மாற்றுத்திறனாளிகளின் திறனை வெளிப்படுத்தும் வகையிலும், உயர்கல்வி பயில வேண்டும் என்ற அவர்களின் எண்ணத்தை நிறைவேற்றும் வகையிலும் இந்த திறன் பயிற்சி மையம் அமையும் என அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.
கல்வி , விளையாட்டு , வேலைவாய்ப்பு என அனைத்திலும் மாற்றுத்திறனாளி நபர்களுக்கு தமிழ்நாடு அரசு தொடர்ந்து பல நல்ல திட்டங்களை கொண்டு வந்தும் அவர்களுக்கு தேவையான ஊக்கங்களை கொடுத்து வரும் நிலையில் இந்த புதிய திட்டம் நல்ல வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது