சென்னையில் நவம்பர் 4 முதல் அமலுக்கு வருகிறது வாகனங்களின் வேக வரம்பு..!!

சென்னையில் இயங்கும் வாகனங்களின் புதிய வேக வரம்பு நவம்பர் 4 முதல் அமலுக்கு வர இருப்பதாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :

சென்னையில் தற்போது மட்டும் 62.5 லட்சம் வாகனங்கள் இயங்கி வருகின்றன. இந்த சூழலில் சாலைப் பாதுகாப்பை கருத்தில் கொண்டு போக்குவரத்து விதிகள் மற்றும் விதிமுறைகளை கடுமையாக்கி உள்ளதாக போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.

  • அதன்படி ஆட்டோக்கள் பகல் 7 மணி முதல் 10 மணி வரை மணிக்கு 25 கிலோமீட்டர் வேகத்திலும், இரவு 10 மணி முதல் காலை 7 மணி வரை மணிக்கு 35 கிலோமீட்டர் வேகத்திலும் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • கனரக வாகனங்கள் பகலில் மணிக்கு 35 கிலோமீட்டர் வேகத்திலும் இரவில் மணிக்கு 40 கிலோமீட்டர் வேகத்திலும் செல்லலாம்.
  • இலகு ரக வாகனங்கள் மற்றும் இரண்டு சக்கர வாகனங்கள் பகல் 7 மணி முதல் 10 மணி வரை மணிக்கு 40 கிலோமீட்டர் வேகத்திலும், இரவு 10 மணி முதல் காலை 7 மணி வரை மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்திலும் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்த புதிய வேக வரம்பு நவம்பர் 4 முதல் அமலுக்கு வர இருப்பதால் போக்குவரத்து விதிகள் மற்றும் விதிமுறைகளை தவறாமல் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Total
0
Shares
Related Posts