கார்த்தியின் குதூகல நடிப்பில் உருவாகியுள்ள ஜப்பான் படத்தின் இரண்டாவது பாடலை படகுக்கு வெளியிட்டுள்ளது .
தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோக்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் கார்த்தியின் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜப்பான்’ . தீபாவளி அன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் கோலாகலமாக வெளியாக உள்ள இப்படத்தின் மீது மிக பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

திருட்டை மையமாக வைத்து டீசெண்டான பொருட் செலவில் தயாரிக்கப்பட்டுள்ள இப்படத்தில் கார்த்திக் ஜோடியாக அனு இம்மானுவேல் நடிக்க சுனில், விஜய் மில்டன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஜி.வி பிரகாஷ் இசையமைப்பில் பக்காவாக ரெடி ஆகி உள்ள இப்படத்தின் டிரைலர் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றது . இதையடுத்து இப்படத்தின் பாடல்கள் ஒவொன்றாக வெளியாகி வருகிறது .

அந்தவகையில் தற்போது இப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது சான் ரோல்டன் குரலில் யுகபாரதியின் வரிகளில் ஜி.வி பிரகாஷ் இசையமைப்பில் அற்புதமாக வெளிவந்துள்ள இப்பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது .
