இந்தியன் 2 படத்தின் சிறப்பான தரமான அப்டேட் ஒன்றை படக்குழு இன்று வெளியிட்டுள்ள நிலையில் ஷங்கர் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசனின் ரசிகர்கள் செம குஷியில் குத்தாட்டம் போடு வருகின்றனர்.
இந்திய சினிமாவில் இருக்கும் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் கமல்ஹாசன். விக்ரம் என்ற பிளாக் பஸ்டர் படத்தை கொடுத்த கையோடு இவரின் நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள படம் இந்தியன்2.
ஷங்கர் இயக்கத்தில் உருவாகி உள்ள இப்படத்தை லைக்கா மற்றும் ரெட் ஜெயிண்ட் நிறுவனம் மிக பெரிய பொருட்செலவில் தயாரித்துள்ளது .
கடந்த சில வருடங்களாக பல இன்னல்களை சந்தித்த இப்படம் தற்போது டப்பிங் வரை போராடி வந்துள்ளது . ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் கமலுடன் காஜல் அகர்வால், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
கடந்த 1997ல் வெளியான இந்தியன் படத்தின் முதல் பாகத்திற்கு கிடைத்த மாபெரும் வரவேற்பால் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தின் மேலும் ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்கமான எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது.
இந்நிலையில் இந்தியன் 2 படத்திலிருந்து இந்தியன் இன்ட்ரோ வீடியோ வரும் நவ 3ம் தேதி வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது . இதனால் அந்த இன்ட்ரோ வீடியோவை பார்க்க ஷங்கர் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசனின் ரசிகர்கள் தற்போதே ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.