மக்களின் கொண்டாட்டங்களுக்கு இடையே 2024 புத்தாண்டு கோலாகலமாகப் பிறந்துள்ளது . நள்ளிரவில் சாலைகளில் குவிந்து ஒருவருக்கு ஒருவர் வாழ்த்து தெரிவித்து மக்கள் உற்சாகமாக அன்பை பரிமாறிகொடுள்ள காட்சிகள் பார்க்கவே கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.
இதே 2024 புத்தாண்டை சிறப்புடன் வரவேற்க கோயில்கள், தேவாலயங்களில் நள்ளிரவில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் ஏராளாமான மக்கள் கலந்துகொண்டு அனைவரும் நலமுடனும் வளமுடனும் வாழ பிரார்த்தனை செய்தனர்.
இடத்திற்கு இடம் ஊருக்கு ஊர் என அவரர் இருக்கும் இடங்களில் ஆடல் அப்பாடல்களுடன் இளசுகள் அனைவரும் இந்த புத்தாண்டை கோலாகலமாக வரவேற்கும் காட்சிகள் தற்போது அணைத்து சமூக வலைத்தளங்களில் செம வைரலாக வலம் வந்துகொண்டிருக்கிறது.
மேலும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு இரவு 1 மணி வரையுமே அனுமதி கொடுக்கப்பட்டதால் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் பொதுமக்களை அமைதியுடனும் பாதுகாப்பாகவும் அவரவர் இல்லங்களுக்கு செல்லும்படி அறிவுறுத்தினர்.