பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. இதில் சிறைவாசிகள் 115 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1 முதல் 22ஆம் தேதி வரை நடைபெற்ற பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.7,60,606 பேர் எழுதிய இந்த தேர்வில் 7,19,196 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இது 94.56சதவீதம் ஆகும். மாணவிகள் 4,08,440 பேரும், மாணவர்கள் 3,52,165 பேரும், மூன்றாம் பாலினத்தவர் ஒருவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
5603 மாற்றுத்திறனாளிகள் தேர்வு எழுதியதில், 5616 பேரும், சிறைவாசிகள் 125 பேர் தேர்வு எழுதியதில் 115 பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
மாணவர்களை விட 4.07சதவீதம் மாணவிகள் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். 7532 மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த மாணாக்கர்கள் தேர்வு எழுதியதில், 2478 மேல்நிலைப் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. 397 அரசு மேல்நிலைப் பள்ளிகளும் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளன.
அறிவியல் பாடப்பிரிவுகளை சேர்ந்தவர்கள் 96.35%, வணிகவியல் பாடப்பிரிவுகளை சேர்ந்தவர்கள் 92.46%, கலைப்பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் 85.67 சதவீதம், தொழிற்பாடப்பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் 85.85% தேர்ச்சி பெற்றுள்ளனர். இயற்பியல் பாடத்தில் 98.48 %, வேதியியல் பாடத்தில் 99.14%, உயிரியல் பாடத்தில் 99.35%, கணிதத்தில் 98.57%, தாவரவியல் பாடத்தில் 98.86%, விலங்கியல் பாடத்தில் 99.04%, வணிகவியலில் 97.77%, கணக்குப் பதிவியலில் 96.61% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
முக்கியப் பாடங்களில் 100% மதிப்பெண்கள் பெற்ற மாணாக்கர்கள் எண்ணிக்கை வருமாறு:
தமிழ் – 35, ஆங்கிலம் -7, இயற்பியல் – 633, வேதியியல் – 471, உயிரியல் – 652, கணிதம் – 2587, தாவரவியல் – 90, விலங்கியல் – 382, கணினி அறிவியல் – 6996, வணிகவியல் – 6142, கணக்குப் பதிவியல் – 1647, பொருளியல் – 3299, கணினிப் பயன்பாடுகள் – 2251, வணிகக் கணிதம் மற்றும் புள்ளியிடல் – 210 பேர் ஆகும்.
ஏதேனும் ஒரு பாடத்தில் 100 மதிப்பெண்கல் பெற்ற மாணாக்கர்களின் எண்னிக்கை 26,352 ஆகும்.