அதிமுக வேட்பாளர்களுக்கு எதிராக சொந்தக் கட்சியினரே உள்குத்து – சவுக்கு சங்கர் பரபரப்பு தகவல்
திமுக வேட்பாளர்களின் வெற்றிக்காக அதிமுக தலைவர்களே உழைப்பதாக சவுக்கு சங்கர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது அதிமுகவினரிடையே பரபரப்பை பற்ற வைத்துள்ளது.
சவுக்கு சங்கர் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:-
திமுக வேட்பாளர் வெற்றிபெற உழைக்கும் அதிமுக தலைவர்கள்.
1) கேசி வீரமணி.
பிரச்சாரத்தில் இதுவரை துரைமுருகனையோ கதிர் ஆனந்தையோ விமர்சித்து ஒரு வீரமணி ஒரு வார்த்தை பேசவில்லை.
இருவரும் தொழில் பங்குதாரர்கள். மேலும் மகனை வெற்றிபெற வைத்தால், வீரமணி மீது இருக்கும் சொத்துக்குவிப்பு வழக்கை முடித்துத் தருவதாக வாக்குறுதி அளித்துள்ளார் துரைமுருகன்.
2) கோகுல இந்திரா – தென் சென்னை தொகுதி அதிமுக பொறுப்பாளர்
தென் சென்னை திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனின் கணவர், ஓய்வு பெற்ற ஐஜி சந்திரசேகர்.
கோகுல இந்திராவின் நெருங்கிய உறவினர் பாஸ்கரன் என்பவர் காவல்துறை ஆய்வாளராக உள்ளார்.
பாஸ்கரன் மூலமாக பெரும் தொகை கோகுல இந்திராவுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தேர்தல் பணிகளில் சுணக்கம் காட்டி மந்தமாகத்தான் கோகுல இந்திரா செயல்பட்டு வருகிறார். ஒற்றை ஆளாக ஜெயவர்த்தன் போராடிக் கொண்டிருக்கிறார்.
ஏற்கனவே கோகுல இந்திரா, திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனை அழைத்து, எம்பியாக தொடர்வதற்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
நாமும் வாழ்த்துக்களை தெரிவிப்போம்
இவ்வாறு தனது தளத்தில் சவுக்கு சங்கர் பதிவிட்டுள்ளது அதிமுகவினர் மத்தியில் வைரலாகி உள்ளது.
ஏற்கனவே அதிமுகவுக்குள் கடைசி நேரத்தில் சிலர் மாற்றுக் கட்சிகளுக்கு ஆதரவாகச் செயல்படுவதாகவும் இதுகுறித்து அதிமுக தலைமைக்கும் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், அந்த கட்சி வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. அவர்கள் மீது தேர்தல் முடிவுகளுக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பரபரப்பு கிளம்பி உள்ளது.