தியேட்டர்களில் வெளியாகி உள்ள படிக்காத பங்கள் திரைப்படத்தில் வரும் ஒரு பாடலை நிக்கக் கோரி மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்கம் போராட்டம் அறிவித்துள்ளது.

எஸ் மூவி பார்க் மற்றும் பௌர்ணமி பிக்சர்ஸ் நிறுவனங்கள் தயாரிப்பில் வெளியாகி உள்ள திரைப்படம் படிக்காத பக்கங்கள்.
இயக்குநர் செல்வம் மாதப்பன் இயக்கத்தில், நடிகை யாஷிகா ஆனந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் இந்த படத்தில்
ப்ரஜின், ஜார்ஜ் மரியன், பாலாஜி, லொள்ளு சபா மனோகர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சமூகத்தில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் குறித்தும், அதிலிருந்து பெண்கள் எவ்வாறு மீண்டு வர வேண்டும் என்பதை மையமாக வைத்துப் படிக்காத பக்கங்கள் திரைப்படம் உருவாகி உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்திருந்தனர்.
இத்திரைப்படம் 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.
இதற்கு ஓரிரு நாட்களுக்கு முன்பாகவே, இந்தப் படத்தில் உள்ள சரக்கு கடை சரக்கு அதில் என்ன இருக்கு என்னும் பாடல் இணையதளத்தில் வெளியானது.

இந்த நிலையில் படிக்காத பக்கங்கள் படத்தில் இருந்து சரக்கு கடைசரக்கு பாடலை நீக்க வேண்டும் என்று மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்கம் தெரிவித்துள்ளது. இந்த சங்கத்தின் நிறுவனர் செல்லப்பாண்டியன் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், படிக்காத படங்கள் படக்குழுவே, சரக்கு கடை சரக்கு அதில் என்ன இருக்கு? பாடலை உடனே நீக்கு நீக்கு எச்சரிக்கை என்று தெரிவித்துள்ளார். இல்லாவிட்டால் மே 19ஆம் தேதி படம் வெளியாகி உள்ள தியேட்டர் முன்பாக உண்ணாவிரதம் இருக்கப் போவதாகக் கூறியுள்ளார்.